இந்தியாவில் மிகப்பெரிய ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான சோமேட்டோ தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் குறியாய் உள்ளது.
ஒருப்பக்கம் புதிய நகரங்களில் தனது வர்த்தகத்தை துவங்கி வரும் சோமேட்டோ மறுபக்கம் ஏற்கனவே வலிமையான வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் பகுதியில் புதிய வர்த்தகத்தை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் சோமேட்டோ நிறுவனம் கைப்பற்றிய Blinkit நிறுவனம் தற்போது ஹோம் சர்வீசஸ் பிரிவில் வீட்டுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் அளிக்க துவங்கியுள்ளது. இதற்கு சோமேட்டோ சிஇஓ Deepinder Goyal-க்கும் என்ன தொடர்பு..? ஏன் அர்பன் கம்பெனி பாவம்..?
சோமேட்டோ
சோமேட்டோ பெரும் தொகையை கொடுத்து வாங்கி Blinkit நிறுவனம் ஹோம் சர்வீசஸ் பிரிவில் சேவைகளை நாட்டின் சில முக்கியமான இடத்தில் மட்டும் அளித்து வரும் வேளையில், இதேபோன்ற சேவை அளிக்கும் அர்பன் கம்பெனி-யின் நிர்வாக குழுவில் தீபிந்தர் கோயல் உள்ளார்.
Blinkit நிறுவனம்
இந்த நிலையில் வர்த்தகம் இரு நிறுவனங்கள் மத்தியில் கிளாஷ் ஆகும் காரணத்தால் அர்பன் கம்பெனி-யின் நிர்வாக குழுவில் தீபிந்தர் கோயல் ராஜினாமா செய்துள்ளார். Blinkit நிறுவனம் குருகிராம் பகுதியை சர்ந்த ChefKart என்னும் நிறுவனத்திடுன் இணைந்து home chef சேவைகளை அளித்து வருகிறது.
அர்பன் கம்பெனி
இப்பிரிவு சேவைகள் வரும்காலத்தில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்படுமான என்பது தெரியாத நிலையில் Blinkit இச்சேவையை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தான் அர்பன் கம்பெனி-யின் நிர்வாக குழுவில் தீபிந்தர் கோயல் ராஜினாமா செய்துள்ளார்.
Zomato Everyday சேவை
இதேவேளையில் சோமேட்டோ நிறுவனம் புதிதாக தனது தளத்தில் Zomato Everyday என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் வாயிலாக வீட்டில் சமைப்பவரிடம் இருந்து மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்படுகிறது.
சூப்பர் ஐடியா
இது வீட்டை விட்டு வேறு நகரத்தில், வேறு மாநிலத்தில் இருப்பவர்களுக்கு வீட்டு சமைத்த உணவு கிடைப்பது மிகவும் கடினம். இந்த இடைவெளியை Zomato Everyday மூலம் வர்த்தகமாக மாற்றியுள்ளது சோமேட்டோ. இதன் மூலம் வீட்டில் சமைக்கும் ஒருவர் உணவை தயாரித்து சோமேட்டோ மூலம் விற்பனை செய்ய முடியும். Zomato Everyday சேவை தற்போது Gurgaon-ல் சில பகுதிகளில் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications