சோமேட்டோ நிறுவனத்திற்குச் சொந்தமான விரைவு வர்த்தக தளம் தான் பிளிங்கிட்.. சமீபகாலமாக சோமேட்டோ ஸ்விக்கி மற்றும் செப்டோ போன்ற தளங்களிடையே போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக தங்களுடைய செயல்பாடுகளை எப்படி மேம்படுத்தலாம் என முன்னணி டெலிவரி தளங்கள் யோசிக்கத் தொடங்கிவிட்டன. அதன்படி தற்போது பிளிங்கிட் நிறுவனம் 10 நிமிட டெலிவரி சேவையை மேம்படுத்தியுள்ளது. இனி லேப்டாப்புகள், பிரிண்டர்கள், மானிட்டர்கள் போன்ற டிஜிட்டல் சாதனங்களை வெறும் 10 நிமிடங்களில் வீட்டிலிருந்து ஆர்டர் செய்து பெற முடியும். தற்போது இவை பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அல்பிந்தர் திண்ட்சா, இப்போது நீங்கள் லேப்டாப்கள், மானிட்டர்கள், பிரிண்டர்கள் போன்றவற்றை 10 நிமிடங்களில் பெறலாம். எங்களுடைய எலக்ட்ரானிக்ஸ் டெலிவரி வரம்பை விரிவுபடுத்தி வருகிறோம். இதற்காக முன்னணி பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளோம்.

எங்களிடம் ஹெச்பி, லெனோவா மற்றும் எம்எஸ்ஐ மானிட்டர்கள் கிடைக்கும். தற்போது டெல்லி என்சிஆர், புனே, மும்பை, பெங்களூர் கொல்கத்தா மற்றும் லக்னோவில் வழங்கி வருகிறோம். நாங்கள் இன்னும் விரைவில் பல பிராண்டுகளை டெலிவரி செய்ய உள்ளோம் என்று தெரிவித்து போஸ்ட் செய்திருந்தார்.
ஜனவரி 8-ஆம் தேதிக்கு முன்னதாக சோமேட்டோ தங்களுடைய அப்ளிகேஷனில் 15 நிமிட டெலிவரி என்ற ஆப்ஷனை கொண்டு வந்தது. இதில் 15 நிமிடங்களுக்குள் கிடைக்கக்கூடிய உணவு வகைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கும். விரைவாக உணவுகளை டெலிவரி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி ஆர்டர் செய்யலாம்.

சமீபத்தில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் விநியோகத் தளமான ஸ்விக்கி நிறுவனமும் 10 நிமிடங்களில் உணவு விநியோகம் செய்வதற்காக போல்ட் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து சோமேட்டோ நிறுவனமும் 15 நிமிடங்களுக்குள் உணவு ஆர்டர் செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆப்ஷனை வழங்கி வருகிறது.
குவிக் காமர்ஸ் துறையில் தீவிர போட்டி நிலவுகின்ற நிலையில், சோமேட்டோ மற்றும் ஸ்விக்கி போன்ற நிறுவனங்கள் புதிய சேவைகள் மற்றும் விரிவாக்கங்களுடன் தங்களது தடயத்தை பதித்து வருகின்றன. இது வாடிக்கையாளர் திருப்தி மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும், அதோடு வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வுகளையும் விரைவான சேவைகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications