சென்னை: இந்தியாவில் குயிக் காமர்ஸ் செயலிகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்த பிரிவில் பிளிங்கிட் (Blinkit) மற்றும் ஸெப்டோ (Zepto)ஆகிய நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
மளிகை சாமான்கள் மட்டுமல்லாமல் மின்னணு சாதனங்கள் , ஐ போன் உள்ளிட்டவற்றையும் ஸெப்டோ டெலிவரி செய்ய தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் அதன் போட்டி நிறுவனமான பிளிங்கிட் இஎம்ஐ என்ற ஒரு புதிய ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது.

இதன்படி வாடிக்கையாளர்கள் 2999 ரூபாய்க்கு மேல் பொருட்களை ஆர்டர் செய்யும் போது இந்த இஎம்ஐ ஆப்ஷனை பயன்படுத்தும் வாய்ப்பினை பிளிங்கிட் நிறுவனம் ஏற்படுத்தித் தந்துள்ளது.
பிளிங்கிட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியான அல்பிண்டர் வின்ஷா எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பிளிங்கிட் தளத்தில் நாங்கள் இஎம்ஐ என்ற ஒரு புதிய விஷயத்தை கொண்டு வந்திருக்கிறோம், நீங்கள் 2999 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்யும் போது இந்த இஎம்ஐ ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனவே பிளிங்கிட் தளத்தில் 2999 ரூபாய்க்கு மேல் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆர்டர்களுக்கும் இஎம்ஐ ஆப்ஷன் கிடைக்கும். குறிப்பாக ஹெச்டிஎஃப்சி வங்கியில் கிரெடிட் கார்டு வைத்திருக்க வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 16 சதவீதம் வட்டி என்ற அளவில் இஎம்ஐ பெற முடியும்.
இதற்கான பிராசசிங் கட்டணமாக ரூ. 199 வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஆண்டுக்கு 15 சதவீத வட்டி கிடைக்கும். இதில் பிராசசிங் கட்டணம் 99 ரூபாய்.
ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பவர்கள் 15. 99 சதவீத வட்டியில் இந்த இஎம்ஐ வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம். கோடக் மகேந்திரா வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும், ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் 16 சதவீதம் ஆண்டு வட்டி செலுத்த வேண்டியது இருக்கும். அதே போல ஆர்பிஎல் வங்கி மற்றும் சிட்டி பேங்க் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் இஎம்ஐ வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் தவிர அனைத்து வகையான ஆர்டர்களுக்கும் இந்த இஎம்ஐ ஆப்ஷன் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து கார்ட்டில் சேர்க்க வேண்டும் . அப்போது அவர்கள் செலுத்த வேண்டிய தொகை 2999 ரூபாய்க்கு மேல் இருந்தால் தானாகவே இஎம்ஐ ஆப்ஷன் என்பது காட்டும்.
தேவைப்படுபவர்கள் அதனை கிளிக் செய்ய வேண்டும். இதனை அடுத்து அங்கே எந்தெந்த வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு எவ்வளவு இஎம்ஐ கிடைக்கிறது என்பன உள்ளிட்ட விவரங்கள் இருக்கும். இது தங்களின் செயலியை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என பிளிங்கிட் நம்பிக்கை தெரிவிக்கிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications