குவிக் காமர்ஸ் தளமான பிளிங்கிட் வியாழக்கிழமை அன்று "10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ்" என்ற சேவையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அவசர மருத்துவ சேவை தேவைப்படும் நபர்களுக்காக இந்த பிரத்தியேக சேவையை நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக பிளிங்கிட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அல்பிந்தர் திண்ட்சா ஒரு பதிவையும் போஸ்ட் செய்துள்ளார்.
உணவுப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை தளமான பிளிங்கிட் 10 நிமிடங்களில் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யும் சேவையை வழங்கி வருகிறது. தற்போது மக்கள் கடைக்கு செல்வது வெகுவாக குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தே ஆர்டர் செய்து பொருட்களை பெறுகின்றனர். தற்போது நிறுவனம் இன்னொரு புதிய சேவையை மக்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.

உடல்நலம் சரியில்லாதவர்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தான் அது. இந்த புதிய சேவை குறித்து தனது X பதிவில் அல்பிந்தர் திண்ட்சா, "எங்கள் நகரங்களில் விரைவான மற்றும் நம்பகமான ஆம்புலன்ஸ் சேவையை வழங்குவதற்கான எங்கள் முதல் படியை எடுத்து வைக்கிறோம். இன்று முதல் எங்கள் நிறுவனத்தின் 5 ஆம்புலன்ஸ்கள் குருகிராமில் கிடைக்கும்ல் . இன்னும் பல பகுதிகளுக்கும் எங்கள் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். லெட்ஸ்பிளிங்கிட் ஆப்-பில் விரைவில் "பேசிக் லைஃப் சப்போர்ட் ஆம்புலன்ஸ்" என்ற ஆப்ஷனை காண்பீர்கள்.
முக்கிய அம்சங்கள்: எங்கள் ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆட்டோமேட்டிக் எக்ஸ்டர்னல் டெபிபிலேட்டர், அவசர தேவைக்கான மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உயிர்காக்கும் விஷயங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் ஒரு துணை மருத்துவர், உதவியாளர் மற்றும் பயிற்சி பெற்ற ஓட்டுநர் இருப்பார்கள். எங்களுக்கு லாபம் ஒரு குறிக்கோள் அல்ல. வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க இந்த புதிய சேவையை கொண்டு வந்துள்ளோம்.
ஆம்புலன்ஸ் பிரச்சினையை தீர்ப்பதற்காக இனி வரும் காலங்களிலும் முதலீடு செய்வோம். இந்த சேவையானது எங்களுக்கு முக்கியமானதாக இருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் கவனமாக விரிவுபடுத்தி வருகிறோம். அடுத்த 2 ஆண்டுகளில் அனைத்து முக்கிய நகரங்களிலும் 10 நிமிட ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும். நம்மால் முடிந்ததை செய்வோம் எப்பொழுதும் ஆம்புலன்ஸுக்கு வழி விடுவோம். இதன் மூலம் நீங்கள் எப்போது ஒரு உயிரை காப்பாற்றுவீர்கள்? என்பது உங்களுக்கே தெரியாத," என்று உருக்கமாக பதிவிட்டு போஸ்ட் செய்திருந்தார்.
பிளிங்கிட் நிறுவனத்தின் இந்த புதிய முயற்சியால் பலர் பலனடைவர் என்று கூறப்படுகிறது. அதுவும் வருவாயை பாராமல் மலிவு விலையில் ஆம்புலன்ஸ் சேவையை வழங்க இருக்கும் நிறுவனத்தின் முயற்சி பல்வேறு பாராட்டுகளை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications