சென்னை போன்ற பெரிய நகரங்களில் பால், காய்கறி உள்ளிட்ட பொருட்களை நாம் இரவு நேரங்களில் கூட ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ள முடிகிறது. செப்டோ, பிளிங்க்ட், இன்ஸ்டாமார்ட் போன்ற குயிக் காமர்ஸ் செயலிகள் இதற்கு வழி வகை செய்கின்றன.
அப்படி பிளிங்கிட்டில் வேலை செய்து வரும் டெலிவரி பார்டனர் ஒருவருக்கு நள்ளிரவில் ஒரு ஆர்டர் வந்துள்ளது. அதுதான் 3 பாக்கெட் எலி மருந்து. பிளிங்கிட்டில் அவர் வழக்கம் போல டூட்டி பார்த்து கொண்டிருந்த போது ஒரு ஆர்டர் வந்துள்ளது. என்ன ஆர்டர் என பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்ததாம். மூன்று பாக்கெட் எலி மருந்து ஆர்டர் செய்திருந்தார்களாம்.

இந்த நள்ளிரவில் எதற்கு எலி மருந்து என முதலிலேயே அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் இதனை அடுத்து அந்த ஆர்டரை வாடிக்கையாளரின் வீட்டிற்கு கொண்டு சென்று இருக்கிறார். அப்போது ஆர்டர் செய்த பெண் வந்த போதும் கண்ணீருடன் காணப்பட்டாராம். இங்கு ஏதோ நிலைமை சரியாக இல்லை என்பதை உணர்ந்து இருக்கிறார் அவர்.
டில்லி ரைடர் என்ற இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டிருக்கும் அவர் மூன்று பாக்கெட் எலி மருந்து ஆர்டர் செய்திருந்தார்கள் . எதற்காக ஆர்டர் செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் அங்கே இதனை டெலிவரி செய்யும் போது அவர்கள் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன் அவர்களுக்கு ஏதோ பிரச்சனை என புரிந்து கொண்டேன். அசம்பாவிதம் நடக்க கூடாது என்பதற்காக ஆர்டரை டெலிவரி செய்யவில்லை என கூறியுள்ளார்.
அந்த பெண்ணிடம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பரவாயில்லை தற்கொலை மட்டும் செய்து கொள்ளாதீர்கள் தற்கொலை செய்து கொள்வதற்காக தான் இதை ஆர்டர் செய்துள்ளீர்களா என கேட்டேன் அந்த பெண் இல்லை என்றால் ஆனால் எலி தொல்லை இருந்தால் பகல் வேளையில் ஆர்டர் செய்திருக்கலாமே , இந்த நள்ளிரவு வேலையில் இந்த சமயத்தில் இதை ஆர்டர் செய்ய வேண்டிய அவசியம் என கேட்டாராம்.
நாம் அந்த எலி மருந்து டெலிவரி செய்யவில்லை அவருக்கு பேசி புரிய வைத்து ஆர்டரை கேன்சல் செய்ய வைத்தேன் என கூறியுள்ளார். அவருடைய இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எட்டு லட்சத்துக்கும் அதிகமான வியூஸ்க்களை பெற்றிருக்கிறது. ஏராளமானவர்கள் அவரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
உங்களை போன்றவர்களால் தான் இன்னும் இந்த உலகம் அனைவரும் வாழ தகுதியான ஒரு பூமியாக இருக்கிறது என கூறியிருக்கிறார். ஒரு சிலர் இன்ஸ்டாமார்ட் போன்ற குயிக் காமர்ஸ் தலங்களில் இது போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை விற்பனை செய்யக்கூடாது, ஒருவனை யாரேனும் இதுபோன்ற பொருட்களை ஆர்டர் செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரும்படியாக மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கூறியிருக்கின்றனர்.ஏராளமானவர்கள் இந்த டெலிவரி பார்ட்னரின் சமயோசித புத்தியையும் ஒரு உயிரை காப்பாற்றிய மனித நேயத்தையும் பாராட்டி வருகின்றனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications