சோமேட்டோ நிறுவனத்திற்கு சொந்தமான பிளிங்கிட் நிறுவனம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் மூலம் இலவசமாக கிறிஸ்மஸ் கேக் கிடைக்கிறது. சமூக ஊடகத் தளமான X-இல் பிளிங்கிட் ஒரு போஸ்ட்டை பகிர்ந்துள்ளது. அதில் ரூ.499 க்கு மேல் ஆர்டர் செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கிறிஸ்துமஸ் கேக்குகளை வழங்க இருப்பதாகவும் அதற்கு போஸ்ட் செய்யப்பட்ட பதிவுக்கு 5000 லைக்குகள் இருந்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளது.
பிளிங்கிட் நிறுவனம் தனது X பதிவில், "கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. இந்த ட்வீட்டிற்கு 5000 லைக்குகள் கிடைத்தால், ரூ. 499 க்கு மேல் ஆர்டர் செய்யும் அனைவருக்கும் இலவச கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்படும்", என தெரிவித்துள்ளது.

பிளிங்கிட் ஆர்டர்களில் இலவச கிறிஸ்துமஸ் கேக் பெறுவது எப்படி?: நீங்கள் செய்ய வேண்டியது நிறுவனத்தின் X போஸ்ட்டுக்கு சென்று அதை லைக் செய்ய வேண்டும். அந்த போஸ்டுக்கு 5000 லைக் கிடைத்தவுடன் ஆர்டர் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் அனைவருக்கும் இலவச கிருஸ்துமஸ் கேக் கிடைக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த கட்டுரையை எழுதும்போதே ஏழாயிரத்துக்கும் அதிகமான லைக்குகள் அந்த பதிவிற்கு கிடைத்திருந்தது.
பிளிங்கிட் நிறுவனத்தின் போஸ்டுக்கு பல்வேறு கமெண்ட்ஸ் வரத் தொடங்கியது. அதில் ஒரு பயனர் தியோப்ரோமாவின் 799 கேக்கை எனக்கு அனுப்புங்கள் என்று கிண்டலாக தெரிவித்திருந்தார். எங்கள் பகுதிக்கு உங்கள் டெலிவரி சேவை கிடையாது. எனவே எனக்கு இலவசமாக ஒரு கேக் கிடைக்குமா? என்று மற்றொரு பயனர் நகைச்சுவையாக தெரிவித்திருந்தார். எனக்கு ரம் கேக் அனுப்புங்கள் என்று ஒருவர் கூறியிருந்தார். மற்றொருவர் ஸ்விக்கி மற்றும் செப்டோ ஆகியவற்றை டேக் செய்து உங்களுடைய திட்டம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

பிளிங்கிட் நிறுவனத்தின் புதுமையான இந்த மார்க்கெட்டிங் முயற்சி மக்களிடையே அதிக வரவேற்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு பிளிங்கிட் நிறுவனத்தின் பிராண்ட் விழிப்புணர்வும் அதிகரித்திருக்கிறது. நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இருப்பதால் பலரும் இந்த பதிவை பயன்படுத்தி ஆர்டர் செய்து வருகின்றனர். அதோடு நிறுவனத்தின் பதிவுக்கு கமெண்ட்ஸ் செக்ஷனில் நகைச்சுவையான பதில்கள் மற்றும் கேள்விகள் நிரம்பி வழிகிறது.


Click it and Unblock the Notifications