ஆப்பிள் ஐபோன் டியோ மாடல் போன் பல விமர்சனங்களுக்குப் பின்பு சந்தைக்கு வந்தாலும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆப்பிள் நிறுவனம் மிகவும் தாமதமாக ஃபோல்டு போன்களை அறிமுகம் செய்திருந்த காரணத்தால் அதிகப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டது.
இதோடு ஆப்பிள் ஐபோன் டியோ-க்கு போட்டியான சீனாவின் சியோமியும் ஒரு ஃபோல்டு போனை அறிமுகம் செய்து டியோவின் வர்த்தகத்திற்கு வேட்டு வைத்து.

உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக வர்த்தகத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் குவிக் காமர்ஸ் தளமான பிளிக்கிட் தளத்தில் அறிமுகம் செய்த 5 நிமிடத்தில் அனைத்து போன்களும் விற்பனையாகித் தீர்ந்துவிட்டதாக பிளிங்கிட் தளத்தின் நிறுவனர் அல்பிந்தர் தின்டசா தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஐபோன் டியோ போன் இந்தியாவில் 2,99,900 ரூபாயில் இருந்து 4,49,900 ரூபாய் வரையில் விற்கப்படும் வேளையில் இந்தியாவில் அதிகளவில் விற்பனை ஆகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சக ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இதேவேளையில் பிளிக்கிட் உட்பட அனைத்து ஈகாமர்ஸ் தளமும் புதிதாக ஸ்டாக் வாங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பொதுவாக புதிய ஐபோன் அறிமுகம் செய்யும் போது கடைகளில் பல மணிநேரம் காத்திருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கும், ஆனால் இந்தியாவில் குவிக் காமர்ஸ் தளங்கள் இதை தலைகீழாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை.
கடந்த வாரம் ஆப்பிள் நிர்வாகம் தனது சப்ளை மற்றும் டிமாண்ட்-ஐ சமநிலைப்படுத்தும் விதமாக உலகில் பல நாடுகளில் ஐபோன் விற்பனையில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது.
அதாவது இந்தியா, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர், ஹாங்காஹ் உள்ளிட்ட நாடுகளில் ஒரு வாடிக்கையாளர் அதிகப்படியாக 2 போன்களை மட்டுமே வாங்க வேண்டும், அதற்கு மேல் வாங்க கூடாது என்ற கட்டுப்பாட்டை ஆப்பிள் நிர்வாகம் அதன் ரீடைல் ஸ்டோர் மற்றும் ஆன்லைன் விற்பனை தளத்திலும் கொண்டு வந்தது.
இத்தகைய அதிகப்படியான டிமாண்ட்-ஐ கணித்து தான் ஆப்பிள் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு உள்ளதாகத் தெரிகிறது. ஆப்பிள் டியோ தற்போது மக்கள் ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிளாக பார்க்க துவங்கிய காரணத்தால் அதிகப்படியான டிமாண்டாக மாறியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் டியோ 4 ஸ்டோரேஜ் அளவில் விற்கப்படுகிறது, 256 ஜிபி 2,99,900 ரூபாய்க்கும்,512 ஜிபி 3,24,900 ரூபாய்க்கும், 1tb 3,74,900 ரூபாய்க்கும், 2 tb 4,49,900 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications