zomato-வுக்குச் சொந்தமான குவிக் காமர்ஸ் தளமான பிளிங்கிட் 10 நிமிடங்களில் மளிகை சாமான்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே டெலிவரி செய்வதற்கு பெயர் பெற்றது. தற்போது இது ஒரு படி மேலே சென்று இன்னும் உயர் மதிப்புடைய பொருட்களை 30 நிமிடங்களில் டெலிவரி செய்வதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கின்றனர்.
வீட்டில் இருந்தபடியே சில கிளிக்குகளின் மூலம் தேவையான பொருட்கள் அனைத்தும் 10 நிமிடங்களுக்குள் வீட்டிற்கே வந்து விடுகிறது. அதுமட்டுமின்றி பல குவிக் காமர்ஸ் தளங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளையும் இலவச பொருட்களையும் வழங்குவதால் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை விட ஆன்லைன் டெலிவரி அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக இந்தத் துறையில் பெரும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் குவிக் காமர்ஸ் தலமான பிளிங்கிட் 30 நிமிடங்களில் உயர் மதிப்புடைய பொருட்களை டெலிவரி செய்வதற்கு "எக்ஸ்பிரஸ் டார்க் ஸ்டோர்களை" அமைக்க தயாராகி வருகிறது. இதன் மூலம் வாட்டர் ஹீட்டர்கள், ஏர் பியுரிஃபையர்கள், நகைகள் மற்றும் பிற உயர்மதிப்புடைய பொருட்களையும் 30 நிமிடங்களில் டெலிவரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டார்க் ஸ்டோர் என்றால் என்ன?: டார்க் ஸ்டோர் என்பது ஆன்லைன் ஷாப்பிங்கிற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட ஒரு சிறிய கிடங்கு போன்ற விநியோக மையமாகும். அதாவது இது நேரடி விற்பனை அல்லாத கடைகள் என்று கூட வைத்துக்கொள்ளலாம். இது விரைவான விநியோகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிரம்பிய குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் அமைந்திருக்கும் கடைகளாகும்.
டார்க் ஸ்டோர்கள் 3000 முதல் 4000 சதுர அடி பரப்பளவில் இருக்கும் மினி கிடங்குகள் ஆகும். பிளிங்கிட்-இன் "எக்ஸ்பிரஸ் டார்க் ஸ்டோர்கள்" 7000 முதல் 8000 சதுர அடி அளவில் சற்று பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரிய தயாரிப்புகளை சேமிக்க உதவும்.
இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், 2026-ஆம் நிதியாண்டின் நடுப்பகுதியில் இந்தத் திட்டங்களை பிளிங்கிட் செயல்படுத்தும் என்றும் விஷயம் தெரிந்த ஒருவர் கூறியுள்ளார். இது முக்கியமாக நிறுவனத்தின் சராசரி ஆர்டர் மதிப்பை உயர்த்துவததை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த துறையில் ஏற்கனவே பிளிங்கிட் நிறுவனத்தின் சராசரி ஆர்டர் மதிப்பு ரூ.614 ஆக உள்ளது. இது ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் ஜெப்டோ ஆகிய நிறுவனங்களின் சராசரி ஆர்டர் மதிப்பான ரூ.450-480-ஐ விட அதிகமாகும்.
பிளிங்கிட் நிறுவனம் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், செப்டோ, ஃளிப்கார்ட், டாட்டாவின் பிக் பாஸ்கெட் மற்றும் பிற நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது. 30 நிமிட டெலிவரி சேவையை அறிமுகம் செய்யும் முதல் குவிக் காமர்ஸ் நிறுவனமாக பிளிங்கிட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல டாட்டா பிக் பாஸ்கெட் நிறுவனமும் 30 நிமிட டெலிவரி திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக குரோமா மற்றும் கிளிக் போன்ற டாட்டா நிறுவனங்களின் சில்லரை நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது என்று நிறுவனத்தின் CEO ஹரி மேனன் தெரிவித்தார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications