ஸ்பீடு மட்டும் போதாது! நியாயமான விலையும், தரமும் முக்கியம்! தீபாவளி ஷாப்பிங்கில் கலக்கும் அமேசான் நவ்!

குவிக் காமெர்ஸ் தளங்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிய காலம் மாறி இப்போது ஸ்மார்ட் போன் மூலம் ஒரு சில கிளிக்குகளில் வீட்டுக்கே வரவழக்கின்றனர். அதுவும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் சொல்லவே வேண்டாம் ஆர்டர்கள் இன்னும் சற்று கூடுதலாகவே இருக்கும். ஆனால் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்கு விரைவான டெலிவரி மட்டும் போதாது. பொருட்களின் தரம், நியாயமான விலை மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் இருப்பது போன்றவையும் அவசியம். இந்த தீபாவளியில் மக்கள் அதிகம் தேர்ந்தெடுத்து ஷாப்பிங் செய்யும் குயிக் காமெர்ஸ் தளம் எது தெரியுமா?

லோக்கல் சர்க்கிள் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் குவிக் காமெர்ஸ் தளங்களைப் பயன்படுத்தும் 71 சதவீத மக்கள் சிறந்த விலையில் பொருட்களை விற்பனை செய்யும் தளத்தையே விரும்புவதாக தெரியவந்துள்ளது. 65 சதவீதத்தினர் பொருட்களின் தரத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றனர். 43 சதவீதத்தினர் எந்தத் தளத்தில் கூடுதல் கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணம் மிகக் குறைவாக இருக்கிறதோ.. அந்த தளத்தையே பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

ஸ்பீடு மட்டும் போதாது! நியாயமான விலையும், தரமும் முக்கியம்! தீபாவளி ஷாப்பிங்கில் கலக்கும் அமேசான் நவ்!

தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்புகள். பரிசுகள், அலங்காரப் பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களின் விற்பனை சற்று அதிகமாக இருக்கும். இந்த நேரத்தை பயன்படுத்தி லோக்கல் சர்க்கிள்ஸ் ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது. மேலும் ஆய்வறிக்கையின்படி எந்த தளத்தில் மக்கள் அதிகம் விரும்பி ஷாப்பிங் செய்கின்றனர் என்ற விவரங்களும் தெரியவந்துள்ளது. அந்த வகையில் அமேசான் நவ் முதலிடம் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பிளிங்கிட், செப்டோ, பிக்பாஸ்கெட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஃபிளிப்கார்ட் மினிட்ஸ், ஜியோமார்ட் க்விக் போன்ற தளங்கள் வருகின்றன.

Also Read

அமேசான் நவ்-வை சுமார் 22 சதவீதத்தினர் தேர்ந்தெடுத்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். அதேபோல பிளிங்கிட்டை 19 சதவீதத்தினரும், செப்டோவை 14 சதவீதத்தினரும், பிக்பாஸ்கெட்டை 12 சதவீதத்தினரும், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டை 9 சதவீதத்தினரும், ஃபிளிப்கார்ட் மினிட்ஸை 8 சதவீதத்தினரும், ஜியோமார்ட் க்விக்கை 4 சதவீதத்தினரும் தேர்வு செய்துள்ளனர்.

இன்னும் 12 சதவீத பயனர்கள் எந்த தளத்தை தேர்வு செய்து ஷாப்பிங் செய்கின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அன்றாட தேவைகளுக்காக மக்கள் பயன்படுத்தும் தளங்களில் பிளிங்கிட் முதலிடம் பெற்றுள்ளது. இதை 31 சதவீதத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். அடுத்தபடியாக அமேசான் நவ் சுமார் 25 சதவீத பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பண்டிகை காலங்களில் மக்கள் கூடுதல் கட்டணம், பொருட்களின் தரம், குறைவான விலை ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப ஷாப்பிங் செய்கின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபர்களில் 60% பேர்.. ஆர்டர் செய்யும் போது டெலிவரி கட்டணம், ஹேண்ட்லிங் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களால் தாங்கள் எதிர்பார்ப்பதை விட பில் அதிகமாக வருகிறது என்று கூறியுள்ளனர்.

என்னதான் குவிக் காமர்ஸ் தளங்களின் பயன்பாடு அதிகரித்தாலும் மக்கள் குறைந்த மதிப்பிலான பொருட்களை வாங்குவதற்கே அதிகம் இதுபோன்ற தளங்களை பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. சுமார் 69 சதவீத பயனர்கள் ரூ.200 முதல் ரூ.999 வரை மட்டுமே ஷாப்பிங் செய்கின்றனர்.

அதேபோல வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில் 35-க்கு சில குவிக் காமர்ஸ் தளங்கள் நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் அமேசான் நவ் மற்றும் செப்டோ 35க்கு 27.5 மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது. அதை தொடர்ந்து பிக் பாஸ்கெட் 26 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இந்த ஆய்வு நாட்டின் 130 மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களிடம் நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+