இந்தியாவில் குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. சென்னை, பெங்களூரு போன்ற நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் செப்டோ, பிளிங்கிட், இன்ஸ்டாமார்ட் போன்ற செயலிகளை பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற நிலை உண்டாகி இருக்கிறது. அந்த அளவிற்கு குயிக் காமர்ஸ் செயலிகளை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
குறிப்பாக பண்டிகை நாட்களில் பூ முதல் பூஜை சாமான்கள் வரை அனைத்தையும் இவற்றின் மூலம் வாங்க முடியும். இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் குயிக்காமர்ஸ் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான விற்பனைகளுக்கு தயாராகி இருக்கின்றன . இதற்காக தங்களுடைய டெலிவரி பார்ட்னர்களுக்கு பண்டிகை கால விற்பனைக்காகவே இன்செண்டிவ் வழங்க தொடங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

நவராத்திரி முதல் தீபாவளி பண்டிகை வரை இந்தியாவின் பெருநகரங்களில் எல்லாம் குயிக்காமர்ஸ் செயலிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனங்கள் தங்களிடம் வேலை செய்யக்கூடிய டெலிவரி பார்ட்னர்களுக்கு விழா கால சிறப்பு பலன்களை வழங்க தொடங்கி இருக்கின்றன.
அதாவது இந்த பண்டிகை கால டிமாண்ட்டிற்கு ஏற்ற வகையில் டெலிவரிகளை மேற்கொள்வதற்கு டெலிவரி பார்ட்னர்களை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஸ்பெஷல் ஊக்கத்தொகை வழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளிங்கிட் டெலிவரி பார்ட்னர்களின் தினசரி வருமானத்தில் 20% தொகையை சிறப்பு இன்செண்டிவ் தொகையாக வழங்குகிறதாம்.
செப்டோ, இன்ஸ்டாமார்ட் ஆகியவையும் இதே போன்ற சிறப்பு பலன்களை டெலிவரி பாட்னர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறதாம். விரைவில் செப்டோ டெலிவரி பார்ட்னர்களுக்கு நல்ல செய்தி வரும் என செப்டோ மேலாளர்கள் எக்கனாமிக்ஸ் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளனர். அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி 2021 ஆம் ஆண்டில் இது போன்ற குயிக் காமர்ஸ் தலங்களில் டெலிவரி பார்ட்னர்களாக வேலை செய்து வந்தவர்களின் மாதாந்திர சராசரி வருமானம் 21,000 ரூபாயாக இருந்து 2025 ஆம் ஆண்டில் 28,000 ரூபாயாக உயர்ந்து இருக்கிறதாம். இது பண்டிகை காலத்தில் 50,000 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
உதாரணமாக செப்டோ நிறுவனம் டெய்லி இன்சென்டிவ் ஸ்கீம் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறது . இதன்படி டெலிவரி பார்ட்னர்கள் ஒரு நாளைக்கு 15 ஸ்பெஷல் ஆர்டர்களை டெலிவரி செய்து முடித்தால் 134 ரூபாய் சிறப்பு ஊக்க தொகையாக வழங்கப்படுகிறது . இதுவே 30 ஆர்டர்களை டெலிவரி செய்தால் 282 ரூபாயை சிறப்பு ஊக்க தொகையாக வழங்குகிறார்கள்.
இந்த பண்டிகை காலத்தில் இன்செண்டிவ் தொகை இன்னும் அதிகரிப்பதற்கு திட்டமிட்டு இருக்கின்றனர் . குறிப்பாக காலை 7 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 8 மணி வரை என பீக் அவர்களில் டெலிவரி பார்ட்னர்கள் ஆன்லைனில் இருப்பதை உறுதி செய்ய அதிக ஊக்கத்தொகை கிடைக்க வழங்க இந்நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன.
பண்டிகை காலங்களில் இந்தியாவில் டெலிவரி பார்ட்னர்களாக வேலை செய்பவர்கள் பெங்களூரு போன்ற நகரங்களில் எல்லாம் ஒரு நாளைக்கு 12 இல் இருந்து 15 மணி நேரம் வேலை பார்க்கிறார்கள் அந்த அளவிற்கு ஆர்டர்கள் அதிகரிக்கின்றன என டீம் லீஸ் நிறுவனம் கூறுகிறது . இந்த பண்டிகை காலத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் பேருக்கு இந்த பிரிவில் தற்காலிக வேலை வாய்ப்பு கிடைக்கும் என டீம் லீஸ் நிறுவனம் கூறுகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications