ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ போன்ற ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களின் வருகையால் மக்களின் வாழ்க்கை முன்பை விட இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே மளிகைப் பொருட்களை எளிதாக ஆர்டர் செய்வதோடு, சில நிமிடங்களிலேயே தங்கள் வீட்டு வாசலிலேயே டோர் டெலிவரியைப் பெற்று விடுகிறார்கள். இதனால் கடைகளுக்கு கிளம்பி செல்லும் வேலை மிச்சமாகிறது.
மேலும், அவசர தேவைகளுக்கு சட்டென்று கடைகளுக்கு செல்ல முடியாத சூழல் உள்ளவர்களுக்கும் பயனுள்ளவையாக இன்ஸ்டன்ட் டெலிவரி ஆப்ஸ்கள் உள்ளன. இது போன்ற ஆப்ஸ்களால் மக்கள் நிறைய பயனடைந்தாலும், ஆன்லைன் மளிகை ஷாப்பிங் வசதி, அத்தியாவசிய பொருட்களை வாங்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்தவகையில், பிளிங்கிட், ஜெப்டோ மற்றும் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆகிய மூன்று இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆப்-கள் சில நிமிடங்களில் ஆர்டர்களை வழங்குவதாகக் கூறுகின்றன. இதேபோல், இந்தியாவில் பிரபலமான விரைவு வர்த்தக தளமாக BigBasket விளங்கி வருகிறது. இந்தநிலையில், இந்த தளங்களின் நன்மைகள் தீமைகள் குறித்து ரெடிட் பயனர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் ஜெப்டோ தளம், வாடிக்கையாளர்களின் மனதை கவரும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்குவதில் தனித்து நிற்பதாகவும், அதே நேரத்தில் பிளிங்கிட், பொருட்கள் பற்றாக்குறை மற்றும் அதிக விலை நிர்ணயம் காரணமாக சற்று பின் தங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மளிகைப் பொருட்களை ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதிலிருந்து அதிகப் பலன்களைப் பெறுவதற்கான உதவிக்குறிப்புகளை அந்த பயனர் பகிர்ந்து கொண்டார். அதில், முதலில் விலைகளை ஒப்பிடுங்கள், பிறகு 15-20 நிமிட நேரத்தில் டெலிவரி செய்வதில் எது சிறந்தது என்பதை தேர்ந்தெடுத்து, உங்களுக்கு வசதியான தளத்திலிருந்து ஆர்டர் செய்யுங்கள் என்று குறிப்பிட்டார். மேலும், ஆன்லைனுக்கு பதில் ஆஃப்லைன் ஷாப்பிங்கை ஆதரிப்பவராக இருந்தால், விலைகளை ஒப்பிட்டு பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து ஒட்டுமொத்த தள்ளுபடிக்கு மேல் கேஷ்பேக் வழங்கும் கிரெடிட் கார்டுகள் பற்றி பேசிய Reddit-பயனர், "Bigbasket-ஐ குறைத்து மதிப்பிடாதீர்கள், அவற்றின் தயாரிப்புகள் நம்பமுடியாத குறைந்த விலைகளுடன் கிடைக்கின்றன என்று குறிப்பிட்டார். பிப்ரவரி 9 அன்று பகிரப்பட்ட இந்தப் பதிவு 250க்கும் மேற்பட்டவர்களிடம் ஆதரவை பெற்றுள்ளது. மேலும் ஒரு பயனர், நண்பா, இது ஒரு வாடிக்கையாளரை ஈர்ப்பதற்கான செயல்முறைதான், 5 முதல் 7 ஆர்டர்களுக்குப் பிறகு பாருங்கள், எல்லாமே அதிக விலைக்கு விற்கப்படும்" என்றார்.
மற்றொரு பயனர் கூறுகையில், 2023 முதல் இது போல் ஷாப்பிங் செய்து வருகிறேன்", அதாவது "நான் Zomato, Instamart மற்றும் Blinkit ஆகியவற்றை 10-15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி மாற்றி பயன்படுத்தி வருகிறேன், மேலும் ஒவ்வொரு முறையும் எனக்கு தள்ளுபடி குறியீடு கிடைக்கிறது என்று குறிப்பிட்டார். இருப்பினும் இந்த தளங்களில் காய்கறிகளை தவிர, MRP தயாரிப்புகளில் நிலையான விலை இல்லாத எதற்கும் ஆன்லைனில் சிறந்த விலை நிர்ணயம் இருக்காது என்று மேலும் ஒரு பயனர் பதிவிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications