அமெரிக்காவில் மிகவும் பிரபலமான நிதியியல் சேவை நிறுவனமாக விளங்கும் Block Inc குறித்து ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையால் ஓரே நாளில் ஜாக் டோர்சி சொத்து மதிப்பு 526 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
அதானி குழுமத்தை தலைகீழாக புரட்டிப்போட்ட ஹண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் நேற்று அடுத்த பெரிய நிறுவனம் குறித்து ரிப்போர்ட் தயார் என அறிவித்த போது பெரும்பாலானோர் மற்றொரு இந்திய நிறுவனத்தை தான் ஹிண்டன்பர்க் டார்கெட் செய்யும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முக்கிய டிவிஸ்ட் ஆக ஹிண்டன்பர்க் வலையில் Block Inc மாட்டிக்கொண்டது.
Block Inc குறித்து ஹிண்டன்பர்க் வியாழக்கிழமை பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கும் நேரத்தில் வெளியிட்டதால் Block பங்குகள் சுமார் 23 சதவீதம் வரையில் சரிந்தது.
Block Inc வளர்ச்சி
Block Inc கொரோனா லாக்டவுன் காலத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்த நிலையில், ஹிண்டன்பர்க் கடந்த 2 வருடமாக இந்நிறுவன நிதியியல் முடிவுகள் முதல் பல்வேறு ஊழியர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் செய்த ஆய்வுகள் மூலம் இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
ஜாக் டோர்சி-யின் சொத்து மதிப்பு
இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பிளாக் இன்க் பங்குகள் பெரிய அளவிலான சரிவை பதிவு செய்த நிலையில், பளாக் இன்க் நிறுவனரான ஜாக் டோர்சி-யின் சொத்து மதிப்பு ஓரே நாளில் 526 மில்லியன் டாலர் சரிந்து தற்போது வெறும் 4.4 பில்லியன் டாலர் உடன் மட்டுமே உள்ளார்.ஓரே நாளில் 11 சதவீத சொத்து மதிப்பை ஜாக் டோர்சி இழந்துள்ளார்.
அமெரிக்க பங்குச்சந்தை
அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கும் Block Inc சுமார் 44 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை கொண்ட நிறுவனமாக உள்ளது. ஜாக் டோர்சி தலைமையில் Block Inc அமெரிக்காவில் வங்கி சேவை இல்லாத, பெற முடியாத மக்களுக்கு எவ்விதமான தங்கு தடையும் இல்லாத வியக்கவைக்கும் நிதியியல் சேவைகளை தொழில்நுட்பத்தின் வாயிலாக அளிப்பதாக கூறிக்கொள்கிறது, ஆனால் உண்மையில் அப்படியில்லை என ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.
நிதியியல் தொழில்நுட்பம்
Block Inc நிறுவனத்திடம் வியக்கவைக்கும் நிதியியல் தொழில்நுட்பம் ஒன்றும் இல்லை, மாறாக நுகர்வோர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான மோசடியை எளிதாக்குவதற்கும், ஒழுங்குமுறையைத் தவிர்ப்பதற்கும் உதவியுள்ளது என ஹிண்டன்பெர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போலியான வாடிக்கையாளர்
பிளாக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் தெரிவித்துள்ள தரவுகள் படி இந்நிறுவனத்தின் 40% - 75% பயனர்கள் எண்ணிக்கை போலியானது அல்லது ஒரு தனி நபருடன் இணைக்கப்பட்ட பல்வேறு கணக்குகளை தனி கணக்காக காட்டப்பட்டு முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளது என்று ஹிண்டன்பெர்க் தெரிவித்துள்ளது.
முதலீட்டாளர்கள்
இதேவேளையில் வாடிக்கையாளர் கையகப்படுத்தல் செலவுகளைக் குறைத்து மதிப்பிட்டுள்ளது இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவில் ஈர்க்கும் விஷயமாக இருந்தது. இந்த பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டு பிளாக் இன்க் பங்குகள் வேகமாக வளர்ச்சி அடைந்தது.
பங்கு விற்பனை
இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிளாக் இன்க் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான ஜாக் டோர்சி மற்றும் ஜேம்ஸ் மெக்கெல்வி, தலைமை நிதி அதிகாரி அம்ரிதா அஹுஜா மற்றும் கேஷ் ஆப்-ன் முதன்மை மேலாளர் பிரையன் கிராஸடோனியா ஆகியோர் பல மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை திட்டமிட்டு விற்பனை செய்து பணமாக்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது ஹிண்டன்பர்க் ரிசர்ச்.


Click it and Unblock the Notifications