டெல்லி : இந்திய பொருளாதாரம் அடுத்த 2021ம் நிதியாண்டில் 7.1 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் ப்ளூம்பெர்க் பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதுவே இது 2020ம் நிதியாண்டில் 5.7 சதவிகிதாமாக அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த தொடர்ந்து ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நடவடிக்கையானது இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தவும் என்றும் கருதப்படுகிறது, இது அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்றும், அதே நேரத்தில் தனியார் முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்றும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் ப்ளும்பெர்க் 2021ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 5 சதவிகிதமாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது. எனினும் இதற்கு அடுத்த மூன்றாவது காலாண்டில் இது 6 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும், இதே நான்காவது காலாண்டில் 6.8 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா சீனா வர்த்தக நிறுவனங்களிடையே வர்த்தக போர் அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது. இதனால் மற்ற வெளிநாட்டு முதலீட்டு மாற்றாக இந்தியா மாறக்கூடும் என்றும் கணித்துள்ளது. இதனால் இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த காலகட்டத்தில் வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்கா சீனா வர்த்தகம் உலகளாவிய உற்பத்தியாளர்களை தங்கள் விநியோகச் சங்கிலிகளை மறுபரிசீலனை செய்யத் தூண்டுகிறது. இது இந்தியாவின் வளர்ச்சியை ஊக்குவிக்க தூண்டும் என்றும் கருதப்படுகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் பருவமழை சரியான நேரத்தில் பெய்துள்ளதால், கிராமப்புறங்களில் வளர்ச்சி அதிகரிக்க கூடும்.
அதன் உலகளாவிய பார்வையில் 2020ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றம், இது நுகர்வோர் மற்றும் முதலீட்டாளார்களின் உணர்வைத் தூண்டும் என்றும் ப்ளூம்பெர்க் பொருளாதார அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் விரைவில் பொருளாதாரம் மீளத் தொடங்கும் எனவும், குறிப்பாக கிராமப்புறங்களில் வருமானம் உயரும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ரிசர்வ வங்கி இதுவரை எடுத்துள்ள வட்டி குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன வரி குறைப்புகள் ஆகியவற்றின் உண்மையான தாக்கம் பொருளாதாரத்தில் பிரதிலிபலிக்க தோன்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் Organisation for Economic Co-operation and Development அமைப்பு தனது அறிக்கையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாக அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications