இந்தியாவின் விவசாயம் அல்லாத ஊழியர்களில் 80 சதவீதம் பேர் புளூ காலர் ஊழியர்களாக உள்ளனர். இவர்கள் தான் இந்தியாவின் பொருளாதாரத்தை பல்வேறு துறைகளிலும் முன்னேற்றும் முக்கியப் பங்கை வகிக்கின்றனர்.
மெக்கின்ஸி அண்டு கம்பெனியின் கணிப்பின்படி 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 90 மில்லியன் புதிய வேலைகளில் 70 சதவீதம் புளூ காலர் வேலைகளாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பணியிடங்கள் கிட்டத்தட்ட 80 சதவீதம் இந்தியாவில் முறைசார்ந்த, முறைசாராத துறைகளில் உள்ள வேலைகளாக இருக்கும். இது இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றும் முக்கிய காரணியாக விளங்கும். இந்த பணியிடங்களை நிரப்புவதால் உற்பத்தி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறைகளில் வளர்ச்சி விகிதம் கணிசமாக உயரும்.
2024 ஆம் ஆண்டின் நிலவரப்படி ப்ளூ காலர் பணியிடங்களில் ஆட்சேர்ப்பு அளவு 10 சதவீதம் முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
2024இல் இ-காமர்ஸ் துறையில் மிக அதிக சம்பள உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ-காமர்ஸில் 10.9 சதவீதம் இருக்கும். இதற்கு அடுத்தபடியாக நிதிச் சேவை துறையில் 10.1 சதவீதம் வளர்ச்சி இருக்கும்.
2023 புள்ளிவிவரப்படி புளூ, கிரே காலர் பணிகள் 1.25 சதவீதம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களித்துள்ளது. இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ், கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், டிரான்ஸ்போர்டேஷன், மேனுபாக்சரிங் ஆகிய தொழில்களுக்கு இன்றியமையாத பங்களிப்பை தந்துள்ளது. இந்த ஊழியர்கள் இந்திய பொருளாதாரத்தின் அடிக்கல்லாக விளங்குகின்றனர்.
இதுபற்றி என்டைட்டில்டு சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும் சிஇஓவுமான அன்ஷுல் குரானா கூறுகையில், இந்தியாவின் 80 சதவீத ஊழியர்கள் (விவசாயத் தொழிலாளர்கள் அல்லாமல்) புளூ மற்றும் கிரே காலர் வேலைகளில் உள்ளனர். எண்ணிக்கையில் 300 ஊழியர்கள் என்றார்.
புளூ காலர் ஊழியர்களின் முக்கியத்துவத்தை இந்தியப் பொருளாதாரத்தில் இருந்து விலக்கிவிட முடியாது. அவர்களது பணி முக்கியத் துறைகளின் வளர்ச்சி, தொழில்துறை முன்னேற்றத்துக்கு மிகப் பெரிய ஊக்கத்தைத் தரும்.
திறனை வளர்ப்பதில் நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் புளூ காலர் ஊழியர்களின் திறன் தேவை அதிகரித்துள்ளது. இவர்களது பங்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.
குரானா மேலும் கூறுகையில், அடிப்படை கட்டமைப்பு, கட்டுமானம், போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளில் புளூ காலர் பணியாளர்களின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் இந்தத் துறையில்தான் அதிக வேலைவாய்ப்பைத் தரும்.
உற்பத்தி வளர்ச்சியை நோக்கி அடியெடுத்து வைக்கும் இந்தியாவுக்கு புளூ காலர் வேலைகள் அத்தியாவசியமாகிறது. கடந்த சில ஆண்டுகளில் புளூ காலர் வேலைகளுக்கு அதிகத் தேவை ஏற்பட்டிருப்பது அவற்றின் பங்களிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று நிரூபிக்கிறது.
2047இல் வளர்ந்த பொருளாதாரமாக இந்தியா மாறுவதற்கு புளூ காலர் ஊழியர்களின் திறனை அதிகரித்தல் முக்கியமான பணியாக இருக்கும் என்றார்.
அவர்களின் முக்கியமான பங்களிப்புகள் இருந்தபோதும், இந்தியாவில் பல புளூ காலர் ஊழியர்கள் பாரம்பரிய சமூக பாதுகாப்பு திட்டங்களால் கவர் செய்யப்படவில்லை. எப்படி இருந்தாலும் தொழிலாளர்களின் இந்தப் பிரிவினருக்கு விரிவான நலனை உறுதி செய்வது சவால்களாகவே உள்ளன.
இதுபற்றி குரானா கூறுகையில் புளூ காலர் ஊழியர்களில் ஒரு சிறிய பகுதியினர் (முழுநேர பணியாளர்களாக தகுதி பெற்றவர்கள்) பாரம்பரிய சமூக பாதுகாப்பு திட்டங்களான ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF), பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஆகியவற்றால் பயனடைகின்றனர்.
சிலர் ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பணியாளர்கள் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (ESIC) போன்ற திட்டங்களால் பயனடைந்தாலும் தாற்காலிக ஊழியர்கள், தினக்கூலிகள் உட்பட கணிசமான விகிதத்தில், அத்தகைய பலன்களைப் பெறவில்லை.
கட்டுமானத் தொழிலாளர்களுக்கான (கட்டட மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டவை) துறை சார்ந்த அரசு திட்டங்கள் சில சுகாதார நலன்களை அவர்களுக்கு வழங்குகின்றன. ஆனால் இவை ஒவ்வொரு தனி மாநிலத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த இடைவெளியை உணர்ந்து, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்த eShram தரவுத்தளம் போன்ற முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்த தொழிலாளர்களில் சிலரை சமூகப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வருவதற்காக அரசு இப்போது அமைப்புசாரா தொழிலாளர்களின் தரவுத்தளத்தை eShram மூலம் உருவாக்கி வருகிறது" என்று குரானா கூறினார்.
அவர் மேலும் கூறினார், புளூ காலர் ஊழியர்கள் உட்பட பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு சுகாதார அணுகலை வழங்குவதற்காக பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (PM-JAY) போன்ற பிற தேசிய திட்டங்களும் உள்ளன, ஆனால் அது பற்றிய விழிப்புணர்வு உண்மையில் குறைவாக உள்ளது.
குறைந்த டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் அதிக பயனர் கையகப்படுத்தல் செலவுகள் போன்ற தடைகளை சமாளிக்க ஸ்டார்ட்அப்கள் தொழில்நுட்பத்தை மேம்படுத்துகின்றன.
இந்தியா தனது பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி நகர்த்த முயற்சிக்கும் போது, புளூ காலர் ஊழியர்களின் நலன் மற்றும் அதிகாரமளித்தலுக்கு முன்னுரிமை அளிப்பது மிக முக்கியமானது.
அரசின் முன்முயற்சிகள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் புதுமையான தீர்வுகள், பொருளாதார செழிப்பு மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்துக்கு இன்றியமையாத இந்த முக்கியமான பிரிவின் சேர்க்கை மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான தேவைகளை குறிக்கிறது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications