பில்லியனர் ஆன எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ள நிலையில், பற்பல அதிரடியான நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.ஒரு புறம் செலவினை குறைக்க பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், மறுபுறம் வருவாயினை அதிகரிக்க ப்ளூ டிக்கிற்கு கட்டணத்திற்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுவே ட்விட்டர் பயனர்களிடையே கடும் விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், மறுபுறம் பலரும் ப்ளூ டிக்கினை பெற்று வருகின்றனர்.
போலி கணக்குகளுக்கு ப்ளு டிக்
தற்போது பொய்ச் செய்திகளை பரப்பும் போலி கணக்குகளுக்கும் ப்ளூடிக்கினை பெற்று வருகின்றனர். இதன் காரணமாக போலிச் செய்திகள் அதிகம் பகிரப்படும் என்று ட்விட்டர் பயனாளர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
சமீபத்தில் பொய்களைப் பரப்புவதற்காகவே எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியுள்ளார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையான விமர்சித்திருந்தார்.
எதிர்காலம் என்னவாகும்?
பைடன் கூறியது போலவே தற்போது பயனர்களும் பகிர்ந்து வருவது, ட்விட்டரின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ட்விட்டரில் நடக்கும் தவறுகள் குறித்து பயனாளர்கள் விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
ஆரம்பமே பணி நீக்கம்
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் முழுமையாக முடிவுக்கு வந்த நிலையில், எலான் மஸ்க் முதல் கட்ட நடவடிக்கையாக ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் உள்ளிட்டவர் 4 முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார்.
$8 டாலர் கட்டணம்
அதன் பின்னர் ட்விட்டரில் கிட்டத்தட்ட 50% பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர ட்விட்டரின் ப்ளூ டிக்கிற்கு மாதம் 8 டாலர் கட்டணம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிட்டார். இது தற்போது பல நாடுகளிலும் அமலுக்கு வந்துள்ளது. சிலர் ப்ளூ டிக்கினை பெறுவதில் சிரமம் இருப்பதாக கூறுகின்றனர்.
பதற்றத்தில் ஊழியர்கள்
இதற்கிடையில் பணி நீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களை நாங்கள் தெரியாமல் பணி நீக்கம் செய்து விட்டோம். திரும்ப வாருங்கள் என அழைப்பு விடுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மொத்தத்தில் ட்விட்டரினை கையகப்படுத்திய நாளில் இருந்து எலான் மஸ்க் அடுத்தடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தினை ஊழியர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்.
பயனர்கள் குழப்பம்
இதற்கிடையில் ட்விட்டர் இன்னும் பயனர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக வரும் மாதங்களில் சோதனை அடிப்படையில் பல வேடிக்கையான விஷயங்களைச் செய்யும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். இது இன்னும் என்ன மாதிரியான மாற்றங்களை கொண்டு வருமோ என்ற குழப்பத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
எது அதிகாரப்பூர்வமானது?
ட்விட்டர் பக்கங்களில் அதிகாரப்பூர்வ முத்திரை ஒன்று, ப்ளூ டிக் கொண்ட கணக்குகளுக்கும், அதிகாரப்பூர்வமாக சரிபார்க்கப்பட்ட ட்விட்டர் பக்கங்களுக்கும் இடையில் வேறுபாட்டை கண்டறிய முடியும் என அந்நிறுவனம் அறிவித்தது.
வரவிருக்கும் மாதங்களில் ட்விட்டர் பல முட்டாள்தனமான விஷயங்களைச் செய்யும். நிறைய சோதனைகளைச் செய்வோம். எது சரியாக செயல்படுகிறதோ அதை வைத்துவிட்டு, பலனளிக்காததை மாற்றுவோம்.


Click it and Unblock the Notifications