ட்விட்டரை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் தற்போது அதனை மேம்படுத்தும் பொருட்டு, பல்வேறு மறுசீரமைப்பு திட்டங்களை செய்து வருகின்றார். குறிப்பாக தலைமை செயல் அதிகாரி தொடங்கி பல்வேறு உயர் மட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். மேற்கொண்டு பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதற்கிடையில் தற்போது அதன் வருவாயினை மேம்படுத்தும் விதமாக பற்பல திட்டங்களை தீட்டி வருகின்றார்.
ஏற்கனவே ட்விட்டரை வாங்கிய கையோடு விளம்பரதாரர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பேசினார்.
பணம் சம்பாதிக்கும் இடம் இல்லை
இதுபோல் இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகள் வரும் என்பதை சுட்டிக் காட்டியது. அதோடு சமூக வலைதளங்களில் வலது சாரிகளும், இடது சாரிகளும் வெறுப்பை வளர்த்து வருகின்றனர். சமூக வலைதள நிறுவனங்களும் அதனை ஊக்குவிக்கின்றன. அதன் மூலம் வருவாய் வருவதாக நம்புகின்றன. ஆனால் அது ஆரோக்கியமான உரையாடலுக்கான தளம் அல்ல, நான் பணம் சம்பாதிப்பதற்காக ட்விட்டரை வாங்கவில்லை. மனித குலத்திற்கு உதவவே வாங்கினேன்.
நம்பகமான பிராண்டு
அரசியலால் ஆரோக்கியமான விவாதங்கள் காணமல் போகின்றன. சட்டத்தினை பின்பற்றுவதோடு, அனைவரின் விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.
மேலும் ட்விட்டர் விளம்பரதாரர்கள் பிராண்டை வலுப்படுத்தும் என்றும், விளம்பரதாரர் நிறுவனத்தை வளர்க்கும் ஒரு நம்பகமான பிராண்டாக இருக்கும் என்றும் எலான் மஸ்க் கூறினார். மேலும் இணைந்து பணியாற்றலாம் என அழைப்பும் விடுத்தார்.
எவ்வளவு கட்டணம்?
இதற்கிடையில் தற்போது ட்விட்டரில் சரிபார்க்கப்பட்ட ப்ளூ டிக் ஆக இருந்தால், நீங்கள் மாத மாதம் கட்டணமாக 4.99 டாலர்களில் இருந்து, 19.99 டாலர்களாக செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து ட்விட்டர் நிறுவனம் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
எப்போது முதல் அமல்?
இது குறித்த தகவலின் படி, இது குறித்தான செயல்பாடுகள் நடந்து கொண்டுள்ளதாகவும், ட்விட்டரின் இந்த நடவடிக்கையானது நவம்பர் 7 முதல் அமலுக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சந்தா அடிப்படையிலான சேவையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல அம்சங்கள்
இந்த கட்டண அம்சத்தில் பயனர்கள் ட்வீட்டினை எடிட் செய்து கொள்ளவும் முடியும் என தெரிகிறது. இது மட்டும் அல்ல இன்னும் பல பிரத்யேக அம்சங்களையும் நடைமுறைப்படுத்த ட்விட்டர் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காகத் தான் மாதம் 20 டாலர் சந்தா, இந்திய மதிப்பில் சுமார் 1600 ரூபாய் கட்டணம் விதிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ப்ளூ டிக் எதற்காக?
ஏற்கனவே கணக்கு சரிபார்க்கப்பட்டவர்கள் இந்த ப்ளூ டிக்கில் 90 நாட்களுக்குள் சப்ஸ்கிரைப் செய்யாவிட்டால், ப்ளூ டிக் நீக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதெல்லாம் சரி அதென்ன ப்ளூ டிக்? ட்விட்டர் தனது தளத்தில் கணக்கு வைத்திருபவரின் அடையாளத்தை சரிபார்த்து சான்றளிக்கும் விதமாக ப்ளூ டிக் குறியீட்டினை கொடுக்கும். இதற்காகத் தான் இனி கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளது.
மாதாந்திர சந்தா
ட்விட்டரின் இந்த ப்ளூ டிக் சேவையானது கடந்த ஆண்டு ஜூன் மாதமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ட்வீட்களை திருத்தம் செய்வதற்கான அம்சம் உட்பட பல அம்சங்களுக்காக மாதாந்திர சந்தா அடிப்படையில் வழங்குகிறது.
இதற்காக தற்போது 4.99 டாலர்கள் வசூலிக்கப்படுக்கிறது. ஆனால் தற்போது இன்னும் பல புதிய பல அம்சங்களுடன் 19.99 டாலர்கள் கட்டணம் வசூலிக்க திட்டமிடபட்டுள்ளதாகவும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications