கோவை: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான பானசோனிக்-ன் துணை நிறுவனமான 'ப்ளூ யோண்டர்' (Blue Yonder) இந்தியாவில் தனது மூன்றாவது அலுவலகத்தை நம்ம கோயம்புத்தூரில் தொடங்குகிறது. சப்ளை செயின் துறையில் அசத்தும் புளூயோண்டர் நிறுவனம், பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களில் ஏற்கனவே அலுவலகங்களைக் கொண்டுள்ள நிலையில், கோவையில் புதிய அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
கோயம்புத்தூரில் பல ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதியான சரணவனம்பட்டி-யில் அதித்யா டெக் பார்க்கில் உள்ள இண்டிக்யூப் என்ற அலுவலகத்தில் நான்காவது தளத்தில் புதிய அலுவலகத்தை ஆகஸ்ட் 16-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறக்க உள்ளது புளூயொண்டர் நிறுவனம்.

ப்ளூ யோண்டர் நிறுவனம், உலகளாவிய அளவில் பல நிறுவனங்களுக்கு சப்ளை சைன் மேலாண்மை தொடர்பான மேம்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மென்பொருள் தீர்வுகள், நிறுவனங்கள் தங்களது சப்ளை செயினை மேம்படுத்தவும், செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன. கோயம்புத்தூரில் அமைக்கப்படும் புதிய கிளை அலுவலகம், இந்தியாவின் வளர்ந்து வரும் ஈ-காமர்ஸ் துறையை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் இந்த நிறுவனம், இந்தியாவில் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டு வருகிறது. கோவையில் புதிய அலுவலகம் திறப்பதன் மூலம், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை நகரில் தொழில்நுட்ப துறை வளர்ச்சி அடைந்து வருவதால், பல நிறுவனங்கள் இங்கு தங்களது அலுவலகங்களை அமைத்து வருகின்றன. புளூயொண்டர் நிறுவனத்தின் வருகை கோவை நகரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை நகரம், தற்போது தகவல் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. உற்பத்தி மையமாக மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம் மற்றும் ப்ராடெக்ட் டெவலப்மென்ட் ஆகிய துறைகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிளை அலுவலகங்களைக் கோயம்புத்தூரில் திறந்து வருவதால், புதிய நிறுவனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் அலுவலக இடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications