2018ம் ஆண்டில் குருகிராமை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவமான ப்ளூ ஸ்மார்ட், நாட்டில் முதல் முறையாக முழுக்க முழுக்க மின்சார வாகனங்களை கொண்டு வாடகை கார் சேவையை அறிமுகம் செய்தது. இந்த ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை தொடங்கியவர்கள், இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் புரோமோட்டர்களான அன்மோல் சிங் ஜக்கி மற்றும் புனித் சிங் ஜக்கி ஆகியோர்தான்.
ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் மின்சார மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கார்கள் சேவை என்ற ஐடியா பல பிரபல முதலீட்டாளர்களை ஈர்த்தது. அவர்களின் மிகவும் முக்கியமான நபர்கள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி, நடிகை தீபிக படுகோன், பிரபல தொழிலதிபர் சஞ்சீவ் பஜாஜ் மற்றும் பாரத் பே இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர்.

நடிகை தீபிகா படுகோனே 2019ல் இந்நிறுவனத்தில் 30 லட்சம் டாலர் முதலீடு செய்தார். பஜாஜ் கேபிட்டலின் நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் பஜாஜ், ஜேடிஒ ஏஞ்சல் நெட்வொர்க் மற்றும் ரஜத் குப்தா ஆகியோருடன் இணைந்து ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தில் 30 லட்சம் டாலர் முதலீடு செய்தார். கடந்த ஆண்டு தோனியின் குடும்ப நிறுவனம், ரீநியூ பவரின் சுமந்த் சின்ஹா மற்றும் சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு சொத்து மேலாண்மை ஆகியவை ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் மொத்தம் 2.4 கோடி டாலர் முதலீடு செய்தன.
உபர் மற்றும் ஓலாவுக்கு சவால் விடும் நோக்கில், ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.4,100 கோடிக்கு மேல் திரட்டியது. ஆனால் இப்போது இந்நிறுவனத்தின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. நிறுவனத்தின் இணை நிறுவனர் அன்மோல் ஜக்கி, நிறுவனத்தின் நிதியை தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக செபி குற்றம் சாட்டியதை தொடர்ந்து, தனது செயல்பாடுகளை ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் ஏப்ரல் 17ம் தேதியன்று வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய மெயிலில், ப்ளூ ஸ்மார்ட் செயலியில் முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
ப்ளூ ஸ்மார்ட் மற்றும் ஜென்சோல்இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களின் புரோமோட்டர்களான அன்மோல் மற்றும் புனீத் சிங் ஜக்கி ஆகிய இரு சகோதரர்களும் ஸ்டார்ட்அப் (ப்ளூ ஸ்மார்ட்) நிறுவனத்திற்கு கார்களை வாங்குவதற்கான கடன்களை குருகிராமில் உள்ள டிஎல்எஃப்-ன் தி கேமிலியாஸில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பு மற்றும் ரூ.26 லட்சம் மதிப்புள்ள உயர் மதிப்பிலான கோல்ஃப் உபகரணங்களுக்கு திருப்பி விட்டது கண்டறியப்பட்டது என்று செபி குற்றம் சாட்டிய இரண்டு நாட்களுக்கு பிறகு இந்த இமெயில் வந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications