டெல்லி: இந்தியாவில் தற்போது பிரபலமடைந்து வரக்கூடிய எலக்ட்ரிக் வாகன வாடகை கார் நிறுவனமான ப்ளூ ஸ்மார்ட் 200 கோடி ரூபாய் முதலீடு திரட்டி உள்ளது. டெல்லி அடுத்த குருகிராமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம். தங்களது செயல்பாட்டினை விரிவாக்கம் செய்யவும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்புகளை உருவாக்கவும் இரண்டாம் கட்ட நிதி திரட்டலில் ஈடுபட்டது.
டிசம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை இந்த நிறுவனம் 710 கோடி ரூபாயை ஈக்விட்டி ஃபண்டின் மூலம் திரட்டி இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ப்ளூ ஸ்மார்ட் என்ற நிறுவனம் குருகிராமில் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் டெல்லி மற்றும் பெங்களூர் ஆகிய பகுதிகளில் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வாடகை சேவைகளை வழங்கி வருகிறது.

70 வாகனங்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 7500 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. அது மட்டும் இன்றி இந்த நிறுவனம் 50 இடங்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைத்துள்ளது.
இந்த நிறுவனம் தற்போது புகழ்பெற்ற நபர்களிடமிருந்து முதலீடுகளை ஈர்த்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த நிறுவனத்திற்கு ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த முதலீட்டு நிறுவனமான ரெஸ்பான்ஸ்செபிலிட்டி (responsAbility ), இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் நிறுவனம் மற்றும் ரினீவ் (ReNew) நிறுவனத்தின் தலைவர் சுமன் சின்ஹா ஆகியோர் மொத்தமாக 200 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முதலீட்டாளர்களாக இருக்கக்கூடிய புனித் கோயல், அன்மோல் சிங் மற்றும் புனித் சிங் ஜகி ஆகியோரும் கூடுதலாக பணத்தை முதலீடு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை பொருத்தவரை தற்போது 9,800 வாடகை ஓட்டுநர்கள் இதில் பணி புரிகின்றனர்.
2023 ஆம் நிதி ஆண்டில் 160 கோடி ரூபாயாக இருந்த இந்த நிறுவனத்தின் வருமானம் 2024 ஆம் நிதி ஆண்டில் 390 கோடி என உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் இந்த நிறுவனம் ஓலா,ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களோடு போட்டியிட்டு வருகிறது.
மற்ற நிறுவனங்களைப் போல இல்லாமல் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை பொறுத்தவரை தங்களுக்கு சொந்தமான அல்லது ஒப்பந்தத்திற்கு எடுத்து கார்களை எடுத்து பயன்படுத்துகிறது.
ஓட்டுனர்களுக்கு நிலையான ஊதியம் மற்றும் செயல்பாடு அடிப்படையிலான ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. எலக்ட்ரிக் வாகன வாடகை நிறுவனமாகவும் ,எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications