டெல்லி: முழுக்க முழுக்க மின்சார வாகனங்களைக் கொண்டு வாடகை கார் சேவைகளை வழங்கி வரக்கூடிய ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் கூடிய விரைவில் அதனை நிறுத்திவிட்டு ஊபர் நிறுவனத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எக்னாமிக் டைம்ஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருக்கிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு குருகிராமை தலைமையிடமாக கொண்டு அன்மோல் சிங் ஜக்கி, புனித் சிங் ஜாக்கி ஆகியோரால் தொடங்கப்பட்ட நிறுவனம் தான் ப்ளூ ஸ்மார்ட். இந்த நிறுவனம் ஓலா, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களைப் போலவே வாடகை வாகன சேவைகளை வழங்குகிறது. ஆனால் இதில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களுமே மின்சாரத்தில் இயங்கக்கூடிய வாகனங்கள். இந்நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் இந்த நிறுவனம் தான் எதிர்பார்த்த அளவு நிதியை திரட்ட முடியவில்லை என்பதால் வாடகை வாகன சேவையை நிறுத்திவிட்டு ஊபருடன் இணைந்து செயல்படுவதற்கு திட்டமிட்டு இருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

நிறுவன பங்குதாரர்களும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட்டதாக தெரிகிறது. இதன்படி தற்போது ப்ளூ ஸ்மார்ட் செயலி நிறுவனத்தின் கீழ் இயங்கக்கூடிய மின்சார வாகனங்கள் படிப்படியாக ஊபர் செயலியுடன் இணைக்கப்பட இருக்கிறது. முதல் கட்டமாக 800 கார்கள் ஊபர் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தொடங்கும் என்றும் பின்னர் படிப்படியாக அனைத்து மின்சார வாகனங்களும் ஊபருடன் இணைக்கப்படும் என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.
அனைத்து வாகனங்களும் ஊபருடன் இணைக்கப்பட்டவுடன் ப்ளூஸ்மார்ட் நிறுவனம் தன்னுடைய வாடகை வாகன தொழிலையே முடித்துக் கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூ ஸ்மார்ட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே நிதி திரட்ட முடியாமல் தடுமாறி வருகிறது. நீண்ட காலமாகவே ஊபர் நிறுவனம் ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தின் பிரதான பங்குதாரராக ஜென்சால் இன்ஜினியரிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தற்போது கடன் நெருக்கடியில் இருக்கிறது. இது ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ப்ளூஸ்மார்ட் நிறுவனம் தற்போதைக்கு 5000 மின்சார வாகனங்களுடன் டெல்லி மும்பை மற்றும் பெங்களூரு பகுதிகளில் வாடகை வாகன சேவைகளை வழங்கி வருகிறது.
ஊபர் நிறுவனம் ஏற்கனவே ஊபர் கிரீன் என்ற பெயரில் மின்சார வாகனங்களைக் கொண்டு வாடகை வாகன சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது ப்ளூ ஸ்மார்ட் நிறுவனத்தின் செயல்பாடுகள் இணைக்கப்படுவதன் மூலம் ஊபர் நிறுவனம் டெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய நகரங்களில் மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications