உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களான பிஎம்டபிள்யூ (BMW) மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹைட்ரஜன் பவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளன. ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்கள் தான் எதிர்காலம் என சொல்லப்படும் நிலையில் டொயோட்டா நிறுவனம் மெதுவாக ஹைட்ரஜன் பவர் கார்களை நோக்கி நகர்ந்து வருவது இதன் மூலம் உறுதியாகி உள்ளது .
இதன்படி பிஎம்டபிள்யூ மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து ஹைட்ரஜன் பவர் கார்களை 2028 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யும் என்றும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளன. இது தொடர்பாக இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய ஹைட்ரஜன் கார்கள் பவர் டிரெயின்கள் மற்றும் இஞ்சின் டிரான்ஸ்மிஷன் உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளன.

ஹைட்ரஜனில் இயங்கும் கார்களை தயாரிப்பது மற்றும் அதனை மக்கள் வாங்கக்கூடிய விலையில் தயாரித்து விற்பனை செய்வது என்ற இரண்டு கருத்தாக்கங்களின் அடிப்படையில் தான் டொயோட்டா மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் இணைந்து இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கின்றன.
ஹைட்ரஜன் பவர் கார்களை பொறுத்தவரை அவை தற்போது இருக்கக்கூடிய மின்சார வாகனங்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றன. உதாரணமாக ஹைட்ரஜன் பவர் கார்கள், எரிபொருள் செல்லிலிருந்து இருக்கும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இடையே நிகழும் ரசாயன வினை புரிதல் மூலம் மின்சாரத்தை உருவாக்கி அதன் மூலம் வாகனத்தை இயக்குகின்றன.
ஆனால் தற்போது நாம் பயன்படுத்தும் மின்சார வாகனங்கள் பேட்டரி மூலம் செயல்படுகின்றன. எனவே வருங்காலங்களில் இது போன்ற ஹைட்ரஜன் கார்கள் தான் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் பெரும் தலைவலியாக இருக்கின்றன, அந்த பிரச்சனையை ஹைட்ரஜன் வாகனங்கள் தீர்க்கும் என பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் துணைத் தலைவர் மைக்கேல் ராத் தெரிவித்துள்ளார். ஹைட்ரஜன் கார்கள் பேட்டரியால் இயங்கும் மின்சார வாகனங்களுக்கு நேரடியான போட்டி கிடையாது என தெரிவித்துள்ள பிஎம்டபிள்யூ நிறுவனம், தற்போதைய சூழலில் பல்வேறு எரிபொருள்களில் இயங்கக்கூடிய கார்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டியது நிறுவனங்களின் கடமை அதைதான் நாங்கள் செய்கிறோம் எனக் கூறியுள்ளார்.
இதற்காக ஹைட்ரஜன் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டி இருக்கும் எனவே பிஎம்டபிள்யூ மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் இணைந்து ஹைட்ரஜன் கார்களை உற்பத்தி செய்வது மட்டுமில்லாமல் அதற்கு தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு உள்ளன. இந்த ஹைட்ரஜன் கார்கள் பல கட்ட தீவிரமான சோதனைகளுக்கு பிறகு தான் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது.
ஹைட்ரஜன் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தும் நிலையில் டொயோட்டா நிறுவனம் தங்களுடைய மின்சார வாகன உற்பத்தியை சற்றே குறைத்துள்ளது. ஏனெனில் உலக அளவில் தற்போது மின்சார கார்களுக்கான டிமாண்ட் குறைந்துள்ளதால் டொயோட்டா நிறுவனம் இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளது . தற்போதுள்ள மின்சார வாகன உற்பத்தி எண்ணிக்கையை 30% வரை குறைக்க டொயோட்டா திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications