உலகம் முழுக்க கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து பலரா இப்போது வரை மீள முடியவில்லை.
அதில் மிகவும் முக்கியமான துறை என்றால் அது ஆட்டோமொபைல் தான். ஜனவரி 2020-ல் இதோ கார் வாங்கப் போகிறேன், இதோ புதிய பைக் வாங்கப் போகிறேன் என காத்திருந்தவர்களுக்கு எல்லாம் கொரோனா பெரிய தலைவலியாக வந்து விடிந்துவிட்டது.
வாகனங்களை வாங்க இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள், பர்சேஸை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துவிட்டார்கள். எனவே பயங்கரமாக விற்பனை சரிந்துவிட்டது.
ஆட்டோமொபைல் விற்பனை டவுன்
ஆட்டோமொபைல் டீலர்கள் அமைப்பான Federation of Automobile Dealers Associations (FADA) கணக்குப் படி, பயணிகள் வாகனங்கள், கடந்த மே 2019-ல் மொத்தம் 2,35,933 வாகனங்கள் பதிவானதாம். ஆனால் இந்த மே 2020-ல் வெறும் 30,749 வாகனங்கள் தான் பதிவாகி இருக்கிறதாம். இது 86.97 % விற்பனை சரிவு. ஒட்டு மொத்தத்தில் எல்லா வகையான வாகனங்களின் விற்பனை 88.8 % சரிந்து இருக்கிறது என கணக்கு சொல்கிறது ஆட்டோமொபைல் டீலர்கள் அமைப்பான (FADA).
ஆட்டோமொபைல் உற்பத்தி சரிவு
விற்பனையே இல்லை என்றான பின், கம்பெனிகள் மட்டும் வாகனத்தை தயாரித்து என்ன பயன். எனவே பல ஆட்டோமொபைல் கம்பெனிகளும் தங்கள் வாகன உற்பத்தி அளவை கணிசமாக குறைத்துவிட்டார்கள். மாருதி சுசூகி தன் உற்பத்தியை கடந்த மே 2020-ல் 97.5 % குறைத்து இருக்கிறது. மே 2019-ல் 1,51,188 வாகனங்களை தயாரித்த மாருதி மே 2020-ல் 3,714 வாகனங்களைத் தான் தயாரித்து இருக்கிறார்களாம்.
உற்பத்தி தொடக்கம்
மாருதி சுசூகி நிறுவனம், ஏறத் தாழ 40 நாட்கள் லாக் டவுனுக்குப் பின், தன்னுடைய உற்பத்தியை ஹரியானாவில் இருக்கும் மானேசர் ஆலையில் கடந்த மே 12-ம் தேதி தான் தொடங்கியது. குருகிராம் ஆலையில் மே 18-ம் தேதி உற்பத்தியைத் தொடங்கியது நினைவு கூறத்தக்கது.
தொடர் விளைவுகள்
இப்போது, இந்த கொரோனா தாக்கம் சர்வதேச ஆட்டோமொபைல் கம்பெனிகளிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. உலகின் முன்னணி சொகுசு கார் நிறுவனங்களின் ஒன்றான பி எம் டபிள்யூ (BMW), தன் 10,000 ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒப்பந்தத்தை நீட்டிக்கப் போவதில்லை எனச் சொல்லி அதிர்ச்சியைக் கிளப்பி இருக்கிறார்கள்.
ஒரு பேக்கேஜ்
BMW கார் நிறுவனம், தன்னுடைய உற்பத்தி அளவுகளைக் குறைத்துக் கொள்ள இருப்பதால், ஒப்பந்த ஊழியர்கள் உடனான வேலை தொடர்பான ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லையாம். ஊழியர்களுக்கான கவுன்சில் உடன் பேசி "personnel measures for a sustainable future" என்கிற பெயரில் ஒரு பேக்கேஜையும் தயார் செய்து இருக்கிறார்களாம். உலகின் டாப் கம்பெனிகளுக்கே இந்த பிரச்சனை என்றால் மற்ற குட்டி குட்டி கம்பெனிகள் எல்லாம் என்ன செய்வார்களோ தெரியவில்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications