இந்தியாவில் வேகமாக வளரும் நகரமாக விளங்கும் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் போட்டிப்போட்டு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களை ஈர்த்து வரும் வேளையில், டாடா குழுமத்தின் முக்கியமான திட்டம் கோயம்புத்தூர்-க்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிஸ் ஆகி சென்னைக்குச் சென்றுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து அதிரடியாகச் செயல்படத் துவங்கியுள்ளது. கோயம்புத்தூரில் புதிய இன்னோவேஷன் சென்டர் முதல் சிஓஓ-வாக தமிழரான சுகன்யா சதாசிவன் என்பவரை நியமித்தது வரையில் பல விஷயங்கள் நடந்துள்ளது.

இதை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம், ஜெர்மனி நாட்டின் பிரபல கார் நிறுவனமான பி.எம்.டபிள்யூ குழுமத்துடன் இணைந்து மென்பொருள் துறையில் புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்க உள்ளதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்த இன்று வெளியாகத் தகவல் படி டாடா டெக்னாலஜி - BMW மும்முனை செயல்பாட்டுத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது இந்த கூட்டணி சென்னை, பெங்களூர், புனே ஆகிய 3 நகரங்களை மையமாக வைத்து இயங்க உள்ளது.
சென்னை-யில் இக்கூட்டணி நிறுவனத்தின் பிஸ்னஸ் ஐடி சொல்யூஷன்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது. சென்னையில் அமெரிக்க ஆட்டோமொபைல் நிறுவனமான போர்டு மாபெரும் பிஸ்னஸ் ஐடி சேவை தளத்தைப் பல வருடமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டாடா டெக்னாலஜிஸ் மற்றும் BMW கூட்டணி ஆட்டோமேட்டெட் டிரைவிங் முறைக்கு தேவையான கார் தொழில்நுட்பம், கார் டேஷ்போர்டு மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு வாகன தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகளை இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற உள்ளது.
புதிதாக உருவாக்கப்படும் இந்த கூட்டு நிறுவனத்தில், டாடா டெக்னாலஜிஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தலா 50 சதவீத பங்குகளை வைத்திருக்கும் என்று டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா டெக்னாலஜிஸ்-க்கு ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தில் நீண்ட கால அனுபவம் உள்ளது, காரணம் இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
டாடா டெக்னாலஜிஸ் மற்றும் பி.எம்.டபிள்யூ கூட்டணி முழுக்க முழுக்க சாப்ட்வேர் சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட நிலையில், கோயம்புத்தூரில் சமீபத்தில் துவங்கப்பட்ட இன்னோவேஷன் சென்டரில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னைக்கு இத்திட்டம் சென்றுள்ளது.


Click it and Unblock the Notifications