வாகன உற்பத்தி துறையிலும் வேலைக்கு உத்தரவாதமில்லை..!! திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW..!!

ஜெர்மனியை சேர்ந்த பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செலவுகளை குறைக்கவும், செயல்பாட்டு திறனை அதிகரிக்கவும் 20% பேரை வேலையில் இருந்து தூக்க இருப்பதாக கூறி அதிர்ச்சியை தந்துள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது உயர் மட்ட மேலாண்மை பிரிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பதவிகளில் உள்ள ஊழியர்களில் சுமார் 20 சதவீதம் பேரை 2027ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இந்த சீரமைப்பு நடவடிக்கையின் மூலம் சீனியர் லெவலில் உள்ள ஊழியர்கள் வேலையை இழக்க உள்ளனர்.

வாகன உற்பத்தி துறையிலும் வேலைக்கு உத்தரவாதமில்லை..!! திடீரென ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் BMW..!!

வாகன உற்பத்தி துறையில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் ஏஐ தொழில்நுட்பம், தற்போது மேலாண்மை மற்றும் நிர்வாக பணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான வால்டர் மெர்ட்ல் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளிலும் ஏஜென்டிக் ஏஐ பயன்பாடுகளை விரிவாக்கம் செய்வதாக கூறியுள்ளார்.

மிகவும் எளிமையான கட்டமைப்புகளை உருவாக்கவும், முடிவெடுக்கும் திறனை துரிதப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும் ஏஐ பயன்பாட்டினை விரிவாக்கம் செய்வதாக கூறியுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் நிறுவனத்தில் முடிவுகள் எடுக்கும் வேகம் அதிகரிக்கும் என்றும், தேவையற்ற மேலாண்மை அடுக்குகள் தவிர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Also Read

சீன சந்தையில் ஜெர்மனி கார்கள் விற்பனை குறைந்துவிட்டது. அதுமட்டும் இல்லாமல் உலக வாகன விற்பனை சந்தையில் நிலவும் மந்தநிலை மற்றும் மத்திய கிழக்கு மோதல்களின் தாக்கம் போன்ற சவால்களை சமாளிக்கவே இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நிறுவனம் கூறினாலும் ஏஐ பயன்பாட்டை அதிகரித்து செலவினங்களை குறைப்பதே இதன் முதன்மையான நோக்கமாக சொல்லப்படுகிறது.

கடந்த மே மாதம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற மிலன் நெடெல்கோவிக் நிறுவனத்தின் உத்தியை மாற்றியுள்ளார். அனைத்து நாட்டு சந்தைகளுக்கும் ஒரே மாதிரியான வாகனத்தை உற்பத்தி செய்யாமல் அந்தந்த நாடுகளின் தேவைக்கு ஏற்ப தயாரிப்பு மற்றும் கொள்முதல் முறைகளை கையாள முடிவு செய்துள்ளார். . 2030-க்குள் சீனாவில் விற்கப்படும் வாகனங்களில் 95 சதவீத்திற்கும் அதிகமானவை அங்கேயே தயாரிக்கப்படும் என கூறியுள்ளார்.

Recommended For You

குறைந்த லாபம் தரும் மற்றும் சிக்கலான சில மாடல்களை கைவிடவும், உயர் ரக கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்துள்ளார். குறிப்பாக, மெர்சிடெஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேபேக் (Maybach) கார்களுக்கு போட்டியாக புது கார்களை கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ மட்டுமல்ல பாரம்பரியமாக வாகன சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்த பல நிறுவனங்களின் கதியும் இது தான். சீன நிறுவனங்களின் ஆதிக்கம் சந்தையில் அதிகமாக இருப்பது, மின்சார வாகன தேவை உயர்வு, ஏஐ வருகை என தங்களின் வியாபார உத்தியையே இவை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+