சீனா-வின் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான BYD கடந்த வாரம் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கவும், எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை தயாரிக்கவும் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய மத்திய அரசிடம் விண்ணப்பம் கொடுத்தது.
BYD மற்றும் மேகா இன்ஜினியரிங் & இன்பராஸ்டக்சர் கூட்டணியில் இந்த மாபெரும் முதலீட்டு திட்டத்தில் முதலீட்டில் பெரும் பகுதி தமிழ்நாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு முதலீட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவித்து ரத்து செய்த காரணத்தால் இத்திட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் ஆடம்பர கார் பிரிவில் முன்னோடியாக இருக்கும் ஜெர்மனி நாட்டின் BMW நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையில் விரைவில் எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஆடம்பர கார் பிரிவில் எலக்ட்ரிக் கார்களுக்கான டிமாண்ட்-ஐ BMW கைப்பற்ற உள்ளதாக தெரிகிறது.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஆடம்பர கார்களை வாங்குவோர் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமாக இளம் தலைமுறையினர், முதல் முறையாக ஆடம்பர கார்களை வாங்குவோர் எண்ணிக்கை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.
இதனாலேயே BMW, ரேன்ச் ரோவர், ஜாகுவார், AUDI, ரோல் ராய்ஸ் போன்ற அனைத்து முன்னணி பிரண்டுகளும் வெளிநாட்டில் கார் அறிமுகம் செய்யும் அதே நாளில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது. முன்பெல்லாம் வெளிநாடுகளில் அறிமுகமான கார் இந்தியாவில் குறைந்தது 6 மாதம் முதல் 9 மாதம் இடைவெளியில் தான் அறிமுகம் செய்யப்படும்.
ஜெர்மனியில் டெஸ்லா எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை அமைத்த நாளில் இருந்து அனைத்து ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் BMW மிகவும் முக்கியமானது.
இந்த நிவையில் தான் இந்திய சந்தைக்கும், வெளிநாட்டு சந்தைக்கும் தேவையான எலக்ட்ரிக் கார்களை BMW தனது சென்னை தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்பட்டு விற்பனையும், ஏற்றுமதியும் செய்யப்பட உள்ளது. சென்னை ஏற்கனவே மாபெரும் ஆட்டோமொபைல் துறை நகரமாக இருக்கும் வேளையில், தற்போது எலக்ட்ரிக் கார் தயாரிப்பு தளமாக மாறும் பயணத்தில் உள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலம் என அனைத்து தரப்புனராலும் நம்பப்படும் வேளையில் இந்திய ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் இதில் ஆதிக்கம் செலுத்தினாலும், இதன் டிமாண்ட் சப்ளை நிலைகளை ஈடு செய்ய முடியவில்லை. இந்த நிலை தான் உலகளவிலும் நிலவி வருகிறது.
ஜெர்மனி நாட்டின் உற்பத்தி, வர்த்தகம் அனைத்தும் ரஷ்ய - உக்ரைன் போருக்கு பின்பு மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அதிலும் முக்கியமாக ஜெர்மனி நாட்டின் ஆட்டோமொபைல் சந்தை ரஷ்யா தனது எரிபொருள் சப்ளை-ஐ கட் செய்த பின்பு மோசமாக பாதித்துள்ளது. இதில் இருந்து தப்பிக்கவும் சென்னையில் BMW தனது எலக்ட்ரிக் கார்களை தயாரிக்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications