ஜேடிஎல் இண்ட்ஸ்ட்ரீஸ் (JTL INDUSTRIES) என்ற ஸ்மால் கேப் நிறுவனத்தின் லட்சக்கணக்கான பங்குகளை பிஎன்பி பரிபாஸ் (BNP Paribas) என்ற பங்குச்சந்தை சார்ந்த நிதி நிறுவனம் வாங்கியுள்ளது. இது தொடர்பாக மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணத்தில் ஜூலை 29ஆம் தேதி இந்த பரிவர்த்தனை நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேடிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்து 11 லட்சம் ஈக்விட்டி பங்குகளை பிஎன்பி பரிபாஸ் வாங்கி உள்ளது. என மும்பை பங்குச்சந்தை இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு பங்கின் விலை 213 ரூபாய் என்ற அளவில் 11 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது.

ஜேடிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கினை பொருத்தவரை ஆகஸ்ட் 2ஆம் தேதி இதன் ஒரு பங்கு மதிப்பு 209 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 166 ரூபாய், 52 வார கால அதிகபட்ச மதிப்பு 278 ரூபாய் ஆகும். பிஎன்பி பரிபாஸ் இந்நிறுவன பங்கினை வாங்கிய அடுத்த நாளில், இந்த நிறுவன பங்குகளில் சுமார் மூன்று லட்சம் பங்குகள் கை மாறி இருப்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக ஜேடிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2025 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இதன்படி இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 30.70 கோடி ரூபாய். அதாவது கடந்த காலாண்டை விட 21% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானமும் 515 . 37 கோடி ரூபாய் என உயர்ந்துள்ளது. இது இது மும்பை பங்குச் சந்தையில் ஸ்மால் கேப் இன்டெக்சில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 3,960 கோடி ரூபாய். கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 13 % உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 93 %, கடந்த மூன்று ஆண்டுகளில் 250 % என அதிகரித்துள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளில் 1915 % லாபத்தை பெற்று தந்துள்ளது.
ஜேடிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை ஸ்டீல் குழாய்களை தயாரித்து விற்பனை செய்து வரும் ஒரு நிறுவனம் ஆகும். ஒரு ஆண்டுக்கு 6 லட்சம் மெட்ரிக் டன்கள் ஸ்டீல் பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறன் கொண்டது. இந்த நிறுவன பங்குகளில் 54 % புரமோட்டர்களிடம் இருக்கிறது. சில்லறை முதலீட்டாளர்கள் 39.64 % பங்குகளையும், வெளிநாட்டு நிறுவனங்கள் 5.8 % பங்குகளையும் கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications