சுந்தர் பிச்சையை பணி நீக்கம் செய்யுங்கள்.. கூகுளின் பணி நீக்க அறிவிப்பால் பரவும் கருத்துகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இது உலகளாவிய அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கூகுள் மட்டும் அல்ல, மைக்ரோசாப்ட், அமேசான், மெட்டா உள்ளிட்ட சில நிறுவனங்கள் பணி நீக்கம் குறித்தான அறிவிப்பினை கொடுத்துள்ளது. இவை சுமார் 48,000 பேர் தொழில்நுட்ப ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுளில் உலகம் முழுவதும் உள்ள ஊழியர்களில் சுமார் 6% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூகுள்  பில்லியன் லாபம் பார்த்திருக்கு.. பணி நீக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது..! கூகுள் பில்லியன் லாபம் பார்த்திருக்கு.. பணி நீக்கத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது..!

கடுமையான பொருளாதார சூழல்

கடுமையான பொருளாதார சூழல்

இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியினை கண்டோம். அந்த வளர்ச்சிக்கு மத்தியில் புதியதாக வேலைக்கு பணியமர்த்தினோம். ஆனால் தற்போது நாம் மாறுபட்ட மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்டு வருகின்றோம். இதனால் இந்த முடிவினை நிறுவனம் எடுத்துள்ளது. இந்த பணி நீக்கம் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

இது பாதிப்பை ஏற்படுத்துகிறது?

இது பாதிப்பை ஏற்படுத்துகிறது?

இந்த நடவடிக்கை ஊழியர்களின் வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பது என்னை பாதிக்கிறது. இதற்காக நான் முழு பொறுப்பேற்கிறேன் என தனது வருத்தத்தினையும் கூறியிருந்தார்.

இருப்பினும் சில தொழில் நுட்ப ஊழியர்களுக்கு இது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நீங்கள் ஏன் பதவி விலக கூடாது, நீங்கள் தவறான பந்தயம் கட்டினால், நீங்கள் ஏன் அதற்கான பணத்தை செலுத்தகூடாது என்ற கேள்வியை விஷால் சிங் YourDOST இன்ஜினியரிங் இயக்குனர் எழுப்பியுள்ளார்.

சத்ய நாதெல்லா

சத்ய நாதெல்லா

மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சத்ய நாதெல்லாவையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல் வாதிகள் கூட திருட்டுக்குப் பிறகு ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என, ஒரு லிங்க்ட் இன் பதிவில் சிங் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் தலைவர்களின் தவறான முடிவுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நம்பிக்கையற்ற ஒரு நாள்

நம்பிக்கையற்ற ஒரு நாள்

மற்றொருவர் கூகுளின் இந்த முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயனர் ஒருவர், கூகுள் இதனை செய்ய முடிந்தால், மற்றவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என பதிவிட்டுள்ளார்.

கூகுளில் புரோகிராம் மேனேஜராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட புல்கிட் பஹ்வா, தானும் மற்ற ஊழியர்களும் அது வரப்போகிறது என பயப்படுவார்கள். ஆனால் கூகுள் அதனை ஒரு போதும் செய்யாது என நினைத்தோம். ஆனால் கூகுள் அதனை செய்துவிட்டது. பல ஆண்டுகளாக நீங்கள் பணிபுரிந்த நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டறிந்தோம். நேற்று ஒரு நம்பிக்கையற்ற ஒரு நாள் என்றும் புல்கிட் கூறினார்.

தொழில்சங்கத்தின் கருத்து

தொழில்சங்கத்தின் கருத்து


கடந்த காலாண்டில் மட்டும் 17 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிய ஒரு நிறுவனத்தில், பணி நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்பதை, ஆல்பாபெட் ஊழியர் சங்கம் விமர்சனம் செய்துள்ளது.

தொழிலாளர்கள் பாதுகாப்பான வேலை வாய்ப்பிற்கான ஆல்பாபெட்டை நம்பியிருக்க முடியாது என்று தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரும் அதிர்ச்சி

பெரும் அதிர்ச்சி

தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் இந்த காலகட்டத்தில் பணி நீக்க நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் டெக் நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கின்றனவோ?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Board should fire sundar pichai: These comments come after the Google layoffs

Board should fire sundar pichai: These comments come after the Google layoffs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X