அச்சச்சோ.. பேங்க் ஆப் பரோடா நிகரநஷ்டம் ரூ.1,407 கோடியா..!

மும்பை: பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 1,407 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகரித்த மோசமான கடன்கள் காரணமாக இந்த நஷ்டம் அதிகரித்ததாக இவ்வங்கி தெரிவித்துள்ளது.

அச்சச்சோ.. பேங்க் ஆப் பரோடா நிகரநஷ்டம் ரூ.1,407 கோடியா..!

18 ஆய்வாளர்களின் ப்ளும்பெர்க் கருத்து கணிப்புப் படி, 683.4 கோடி ரூபாய் லாபத்தை கணித்த நிலையில், இந்த வங்கியின் மிகப்பெரிய நஷ்டம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1 அன்று பேங்க் ஆப் பரோடா அரசுக்கு சொந்தமான மற்ற இரண்டு வங்கிகளான தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றுடன் இணைத்தது. அதிலும் முந்தைய ஆண்டு இதே டிசம்பர் காலாண்டில் 436 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐயின் முன்னாள் நிர்வாகி சஞ்சீவ் சாதா, இந்த வார தொடக்கத்தில் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வைப்பு வளர்ச்சி மற்றும் கட்டண வருமானம் போன்ற அளவுருக்களில் வங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். எனினும் வாராக்கடனில் மாறுபட்டுள்ளதால் இது ஒரு கடினமான காலாண்டாக இது அமைந்தது என்றும், எனினும் தனிப்பட்ட முறையில் இவ்வங்கி நன்றாக செயல்பட்டுள்ளது என்றும் சாதா தெரிவித்துள்ளார்.

இந்த வங்கியின் வாராக்கடன் விகிதமானது கடந்த டிசம்பர் காலாண்டில் 4.05% அதிகரித்துள்ளது. இதுவே செப்டம்பர் 2019ல் 3.90 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது குறித்து கூறியுள்ள ஜெயின் நடப்பு நிதியாண்டில் வாராக்கடன் அளவு 4 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்றும் இவ்வங்கி மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே வணிக ரீதியில் ஆன வருவாய் அதிகரித்துள்ளதாக இவ்வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக சில்லறை கடன்களில் 15 சதவிகிதம் விரிவாக்கம் கண்டதாகவும் கூறப்படுகிறது. இதே கார்ப்பரேட் கடன்களின் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ச்சி காணா விட்டாலும், 9,955 கோடி ரூபாயாக இருந்தது. எனினும் இதில் 2,400 கோடி ரூபாய் திவால் நிலைக்கு தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே நிகரவட்டி மார்ஜின் அளவானது கடந்த டிசம்பர் காலாண்டில் 2.80 சதவிகிதமாக வளர்ச்சி கண்டது. இதே முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுபோது இதே காலாண்டில் 2.62% ஆகவும் இருந்தது. இது கிட்டதட்ட 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+