மும்பை: நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கிய நிலையிலேயே, இந்தியாவில் முழு ஊரடங்கு பிறபிக்கப்பட்டது.
இதனால் மக்கள் தாங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஏன் சிலர் தங்களது அத்தியாவசிய தேவைக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் பலரின் கோரிக்கையே நாங்கள் வேலையிழந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கிறோம். இதனால் வங்கிகளில் வாங்கியுள்ள கடனை தற்போது திரும்ப செலுத்த முடியாது. வங்கிகள் போதிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது.
ரிசர்வ் வங்கி சலுகை
பலர் அத்தியாவசிய தேவைகளுக்கே கஷ்டப்படும் நிலையில், இஎம்ஐ எங்கிருந்து செலுத்துவது என கேள்வியெழுப்பினர். மேலும் இஎம்ஐ செலுத்த போதிய அவகாசம் வழங்கப்பட வேண்டும். வட்டியை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன் வைத்து வந்தனர். இதன் எதிரொலியாக, ரிசர்வ் வங்கியும் பல சலுகைகளை அறிவித்தது.
90% பேர் பயன்
மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ரிசர்வ் வங்கி 3 மாத தவணைக்கு வங்கிகள் அவகாசம் கொடுக்கலாம் என அனுமதி கொடுத்தது. இதற்கிடையில் தான் பல வங்கிகளும் அனுமதி கொடுத்து வந்தன. இந்த நிலையில் பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையில், 3 மாத தவணை அவகாசம் விவகாரத்தில் தகுதியானவர்களில், 90% பேர் அதனை தேர்தெடுத்துள்ளதாக அவ்வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் சதா தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கிகளை விட அதிகம்
கேர் மதிப்பீட்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேசிய சதா, எங்களின் வாடிக்கையாளர்களில் 90% பேர் இந்த அவகாசத்தினால் பயன் அடைந்துள்ளனர். இது தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகம். தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது, தனியார் வங்கிகள் இந்த ஒத்தி வைப்பு மிக குறைவு. குறிப்பாக ஆக்ஸிஸ் வங்கி அறிக்கையின் படி, ஏப்ரல் 25 நிலவரப்படி 10 - 12% வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த கால அவகாசத்தினை தேர்தெடுத்துள்ளனர்.
இப்படி கூட ஒரு வாய்ப்பினை வழங்கினோம்
இதே யெஸ் பேங்கில் 15 - 25% வாடிக்கையாளர்கள் மட்டுமே இதனை தேர்வு செய்துள்ளனர். மேலும் சாதா, ஏற்கனவே வங்கிகளில் தவணைகளை பற்று வைத்திருந்தாலும் கூட, வங்கி வாடிக்கையாளர்களுக்கு திரும்ப பெறுவதற்கான வாய்ப்பினை கொடுத்தது. இந்த சமயத்தில் பணப்புழக்கம் பற்றாக்குறை என்பதை நாங்கள் உணர்கிறோம். எனினும் வாடிக்கையாளர்கள் தங்கள் பணப்புழக்கத்தினை விரும்பலாம் என்றும் கூறியுள்ளார்.
வட்டி குறைப்பு இல்லையே?
சில்லறை கடன்களில் கொரோனா பாதிப்புக்கு முன்பே அழுத்தம் இருந்ததாகவும் சதா கூறியுள்ளார். இப்போது இயல்பு நிலை என்பது விவாததற்திற்குரிய ஒன்று. ஆக இனி என்ன நடக்கும் என்பதை இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எப்படி இருப்பினும் பேங்க் ஆப் பரோடா மட்டும் அல்ல பல வங்கி வாடிக்கையாளர்களும், இந்த கால அவகாசத்தினால் நிச்சயம் பயன் அடைந்துள்ளனர் என்றே கூறலாம். எனினும் வட்டி குறைப்பு இல்லை என்பது சற்று கவலையளிக்கும் விஷயமாகத் தான் இருக்கிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications