முன்னாள் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பாப் இகர் மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாகத் திரும்பப் பொறுப்பேற்றுள்ளார்.
இவரது நியமனம் குறித்து வால்ட் டிஸ்னி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வால்ட் டிஸ்னி நிறுவனத்தில் சுமார் 15 ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்றார் பாப் இகர்.
பிப்ரவரி 2020 இல் டிஸ்னியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற பாப் சாபெக் இப்பதவியில் இருந்து விலகும் நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகள் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார் பாப் இகர்.
பாப் சாபெக்
பிப்ரவரி 202 முதல் பாப் சாபெக் தலைமையில் வால்ட் டிஸ்னி, குறிப்பாக கோவிட்-19 தொற்றுநோய் காலத்தில் டிஸ்னி தனது ஸ்ட்ரீமிங் மீடியா பிரிவில் தொடர்ச்சியான இழப்புகளைப் பெற்ற நிலையில் முதலீட்டாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து பாப் சாபெக் சிஇஓ பதவியில் இருந்து நீக்கப்பட்டுப் பாப் இகர் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
வால்ட் டிஸ்னி
வால்ட் டிஸ்னி தீம் பார்க் அமைந்துள்ள புளோரிடாவில் "டோன்ட் சே கே" சட்டத்தைக் கையாண்ட விதத்தில் சில டிஸ்னி ஊழியர்களைப் பாப் சாபெக் வருத்தப்படுத்தினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவின் பொதுப் பள்ளி ஆசிரியர்கள் பாலின அடையாளம் குறித்த அறிவுறுத்தல்களை வழங்குவதை இந்தச் சட்டம் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
பாப் இகர்
பாப் இகர் இன் தலைமையின் கீழ் தான், வால்ட் டிஸ்னி Pixar, Marvel, Lucasfilm மற்றும் 21st Century Fox ஆகியவற்றை வாங்கியது. இந்தக் கைப்பற்றல் வாயிலாகத் தான் டிஸ்னி என்டர்டெயின்மென்ட் உலகில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செய்தது.
15 வருடம்
இது மட்டும் அல்லாமல் பாப் இகர் தலைமையிலான 15 வருடத்தில் வால்ட் டிஸ்னி சீனாவில் அதன் முதல் தீம் பார்க் ஆன ஷாங்காய் டிஸ்னி ரிசார்ட்டை திறந்து, டிஸ்னி+ மற்றும் ஈஎஸ்பிஎன்+ ஸ்ட்ரீமிங் சேவைகளை அறிமுகப்படுத்தியது.
கொரோனா தொற்றுக் காலம்
கொரோனா தொற்றுக் காலத்தில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்றவை மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில் டிஸ்னி மந்தமான வர்த்தகத்தைப் பதிவு செய்தது மட்டும் அல்லாமல் ஐபிஎல் போட்டிகளின் ஏலத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தை இழந்தது.
ஸ்ட்ரீமிங் மீடியா பிரிவு
இந்த நிலையில் தான் ஸ்ட்ரீமிங் மீடியா பிரிவில் தொடர்ச்சியான இழப்புகளைப் பெற்ற காரணத்திற்காகப் பாப் சாபெக் தலைமை பதவியை நீக்கிவிட்டு பாப் இகர்-ஐ மீண்டும் நியமிக்கிறது. 2020ல் பாப் இகர் தான் பாப் சாபெக்-ஐ தலைவர் பதவிக்குத் தேர்வு செய்தார். ஆனால் இப்போது தலைகீழாக மாறியுள்ளது.
ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ்
இதேபோலத் தான் ஆப்பிள் நிறுவனத்தில் சிஇஓ-வாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பல்வேறு காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டுச் சில வருடங்களுக்குப் பின் பின்பு ஆப்பிள் தொடர் வளர்ச்சியை ஏற்பட்டு வரும் காரணத்தால் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸ் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.
பாப் இகர் ஸ்டார்
பொதுவாக வெளியேறிய சிஇஓ-வை திரும்ப அழைக்கும் நிகழ்வுகள் பெரும்பாலும் நடக்காது. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தைப் போலத் தற்போது டிஸ்னி நிறுவனத்தில் பாப் இகர்-க்கு நடந்துள்ளது. இவரின் தலைமையில் டிஸ்னி-யின் ஸ்ட்ரீமிங் சேவை பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications