17,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் போயிங்.. கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை!

ஒரு சில மாதங்களாகவே பணி நீக்கங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முன்னணி ஐடி நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் என பணி நீக்கங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்களும் கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. குறிப்பாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த பிறகு ஐடி நிறுவனங்கள் கூட்டம் கூட்டமாக ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பி வருகிறது.

அந்த வகையில் போயிங் நிறுவனமும் சேர்ந்துள்ளது. இந்நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. போயிங் நிறுவனம் சுமார் 17,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. சில ஒழுங்குமுறை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகளையும் இந்நிறுவனம் எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. இதில் மேலாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர்.

 17,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் போயிங்.. கடுமையான நிதி நெருக்கடியை சமாளிக்க நடவடிக்கை!

போயிங் நிறுவனம் விமானம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் 1916-ஆம் ஆண்டு வில்லியம் போயிங் என்பவரால் துவங்கப்பட்டது. இந்த வாரம் சுமார் 17,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை போயிங் நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களில் 10% என்றும் கூறப்படுகிறது.

இந்நிறுவனம் செலவுகளை குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உலக அளவில் இந்த நிறுவனத்தில் சுமார் 1,70,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மற்றும் வாஷிங்டன் பகுதிகளில் பணிபுரிபவர்கள். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான கெல்லி ஆர்ட்பெர்க், நிறுவனத்தின் நிதி நிலையை கருத்தில் கொண்டு இந்த மாற்றங்களை செய்வதாக எழுத்துப்பூர்வமாக ஊழியர்களுக்கு தெரிவித்திருக்கிறார். முன்னதாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் பணிகள் எந்தவித தடையும் இன்றி தொடரும் என்றும் கெல்லி தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும் நிறுவனம் கடுமையான சவால்களைச் சமாளிப்பதற்காக கடுமையான முடிவுகளை எடுத்து தான் ஆக வேண்டும் இதனால் தான் அதிகாரிகள் மேலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட 17,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளோம் என்று ஆர்ட்பெர்க் அறிவித்திருக்கிறார். அதேபோல 2027-ஆம் ஆண்டில் தயாரிக்க இருந்த 767 விமானங்களில் உற்பத்தியும் நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. இது தவிர நிறுவனத்தின் 777X புதிய விமானத்தில் தொழில்நுட்பக் குறைபாடுகள் காணப்படுவதால், 2026-ஆம் ஆண்டு வரை 777X விமானத்தின் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக போயிங் நிறுவனம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சில பாதுகாப்பு அம்சங்களும் காரணமாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் 2 ஆபத்தான விபத்துக்கள் போயிங் நிறுவனத்தின் விமானத்தால் நடந்துள்ளது. இதனால் நிறுவனம் 737 மேக்ஸ் தயாரிப்பை நிறுத்தி இருக்கிறது. இது தவிர போயிங் ஊழியர்கள் இந்த ஆண்டு பெரிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாகவும் பல பெரிய விமானங்களில் உற்பத்தி நிறுத்த வேண்டியிருந்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+