பெங்களூரில் முதல் அடி.. இந்தியாவிலும் Layoff துவங்கியதா? கதறும் ஊழியர்கள்..!!

அமெரிக்கப் பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் தேக்க நிலை ஏற்பட்டு இருக்கும் இதேவேளையில் ஏஐ என்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பம் பல துறைகளை தலைகீழாகப் புரட்டிப்போட்டு வருகிறது. அமெரிக்காவில் 100க்கு 99 நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்தலாம், எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தலாம், எங்கெல்லாம் பயன்படுத்தலாம் என்பதில் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.

முதலில் ஏஐ பயன்படுத்துவதற்கு பெரும் முதலீடு தேவை என்ற நிலை இருந்தது, ஆனால் தற்போது அமெரிக்கச் சீனா நிறுவனங்களுக்கு மத்தியிலான போட்டி நாளுக்கு நாள் ஏஐ துறையில் பெரும் வளர்ச்சியும், மலிவான கட்டணங்களில் உயர்தர சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் விதமாக ஊழியர்களுக்குப் பதில் ஏஐ சேவையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.

பெங்களூரில் முதல் அடி.. இந்தியாவிலும் Layoff துவங்கியதா? கதறும் ஊழியர்கள்..!!

இதன் எதிரொலியாகப் பல லட்சம் ஊழியர்கள் கடந்த 3 வருடத்தில் அமெரிக்காவில் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதன் தாக்கம் இதுநாள் வரையில் அமெரிக்கா, சீனா, பிரிட்டன் நாடுகளில் மட்டுமே அதிகமாக இருந்த நிலையில் இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கத் துவங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெங்களூரில் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ள நிறுவனத்தின் பெயர் அப்படிப்பட்டது.

பெங்களூரில் உள்ள இயங்கி வரும் அமெரிக்க நிறுவனமான போயிங்-ன் போயிங் இந்தியா இன்ஜினியரிங் தொழில்நுட்ப மையத்தில் (BIETC) சுமார் 180 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், உலகளவில் தனது செயல்பாடுகளை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த ஆட்குறைப்பை மேற்கொண்டுள்ளது.

சமீபத்தில் தான் இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் போயிங் நிறுவனத்திற்கு புதிய விமானங்களைப் பெறுவதற்கான ஆர்டரை குவித்தது. இந்த நிலையில் பணிநீக்க அறிவிப்புகள் வெளியாகியுள்ளது பெரும் அச்சத்தைக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

போயிங் நிர்வாகம், இந்தியாவில் நிறுவனத்தின் அளவை பொருளாதார சூழலுக்கு ஏற்ப சரிசெய்யும் முயற்சியாக இந்த பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று போயிங் குளோபல் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் தலைவருமான டாக்டர் பிரெண்டன் நெல்சன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் உள்ள போயிங் நிறுவனத்தில் சுமார் 7,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலோர் கிட்டத்தட்ட 6500 பேர் பெங்களூர் மற்றும் சென்னை-யில் இருக்கும் BIETC மையங்களில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, பெங்களூரில் உள்ள இந்த டெக் சென்டர் போயிங் நிர்வாகம் அமெரிக்காவிற்கு வெளியே அமைந்த மிகப் பெரிய டெக் சென்டரில் ஒன்றாகும்.

பெங்களூர் டெக் சென்டர் கடந்த ஜனவரி 2024-ல் தான் திறக்கப்பட்டது, ஆனால் அதற்குள் 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்வது என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக உள்ளது. போயிங் இந்தியாவில் மட்டும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யவில்லை, உலகளவில் இருக்கும் வர்த்தகத்தை மறுசீரமைக்க அனைத்து நாடுகளிலும் சிறிய அளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைந்து வருகிறது.

போயிங் நிறுவனத்தின் இந்த பணிநீக்க நடவடிக்கையில் உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கை 162,000 ஆக குறைக்கப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. போயிங் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 15% ஊழியர்கள் அமெரிக்காவிற்கு வெளியே பணியாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் நேரடியாக 7000 பேரும், சப்ளை செயின் நிறுவனங்கள் வாயிலாக 7000 பேர் என மொத்தம் 14,000 ஊழியர்களைக் கொண்டு போயிங் நம்நாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகளவில் போயிங் நிர்வாகம் தனது மொத்த ஊழியர்களில் 10% அதாவது சுமார் 17,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்துள்ளது. இதில் பெங்களூர் டெக் டென்டரில் மட்டும் 180 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் பிற அமெரிக்க நிறுவனங்களும் பணிநீக்க அறிவிப்பை வெளியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+