இந்திய விமான போக்குவரத்தில் வேகமாக வளர்ந்து வரும் ஏர் இந்தியாவின் மலிவு விலை விமானச் சேவை அளிக்கும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிறு நகரங்களைப் பெரிய நகரங்களுடன் இணைக்கும் திட்டத்தில் தீவிரமாக உள்ளது. மேலும் இந்தியாவின் அனைத்து பெரு நகரங்கள் உடன் 2ஆம் தர நகரங்களை இணைப்பது தான் அதன் முக்கியமான கனவுத் திட்டமாக உள்ளது.
இந்த நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கனவை வேகமாக நிறைவேற்ற ஏதுவாக ஒவ்வொரு மாதமும் ஏழு 737 மேக்ஸ் விமானங்களை டெலிவரி செய்ய Boeing திட்டமிட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் திறன் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் உலகமே வியக்கும் வண்ணம், இதுவரையில் எந்தொரு விமான நிறுவனமும் செய்திடாத வகையில் 470 விமானங்களை ஆர்டர் செய்தது. ஏர் இந்தியா 470 விமானங்களை அமெரிக்காவின் போயிங் மற்றும் ஐரோப்பிய ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்தது.
இந்த ஆர்டரின் ஒருபகுதியாக 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 50 போயிங் 737 மேக்ஸ் விமானங்களை டெலிவரி எடுக்கவும், அதை விமானச் சேவை பயன்பாட்டில் கொண்டு வரவும் திட்டமிட்டு வருகிறது ஏர் இந்தியா. இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையில் முன்னணியில் இருக்கும் இண்டிகோ உடன் போட்டிப்போட்டு முதல் இடத்தைப் பிடிக்க இலக்கு வைத்துள்ளது.
போயிங் நிறுவனம் 737 மேக்ஸ் விமானத்தின் உற்பத்தியில் இடையூறு ஏற்பட்டாலும், விமானத்தின் டெலிவரியை உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா சுமார் 190, 737 மேக்ஸ் விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது, அதில் ஐந்து டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் விமானங்களின் டெலிவரிகளை நவம்பர் மாதம் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்திற்குப் பிறகு நவம்பர் மாதம் அதிகபட்ச டெலிவரியை செய்துள்ளது. மேலும் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் விமானச் சேவை நிறுவனங்களில் தற்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மட்டுமே லாபகரமானதாக உள்ளது, மற்ற நிறுவனங்கள் அனைத்தும் இழப்பில் மட்டுமே உள்ளது.
2023 ஆம் நிதியாண்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 116.84 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று இருக்கும் வேளையில், டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் மற்ற 3 விமானச் சேவை நிறுவனங்களான ஏர் ஏசியா இந்தியா, விஸ்தாரா, ஏர் இந்தியா ஆகியவை மொத்தமாக 15,530 கோடி ரூபாய் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளது.
டாடா குழுமம் இந்த 4 விமானச் சேவை நிறுவனத்தை 2 விமான நிறுவனமாக மறுசீரமைப்புச் செய்ய உள்ளது. இதில் ஏர் ஏசியா இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஒரு நிறுவனமாகவும், ஏர் இந்தியா - விஸ்தாரா ஆகியவை ஒரு நிறுவனமாக இணைக்கப்பட உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications