உலகம் முழுவதும் டெக் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கவும், ரெசிஷனுக்குத் தயாராகவும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் 2வது முறை, 3வது முறையும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த ரெசிஷன் அச்சம் டெக் ஊழியர்களை மட்டுமே இதுநாள் வரையில் பாதித்து வந்த நிலையில் தற்போது பிற முக்கியமான துறைகளையும் பாதிக்கத் துவங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய விமானத் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான போயிங், இந்த ஆண்டு நிதி மற்றும் மனித வள பிரிவில் சுமார் 2000 ஒயிட் காலர் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு உள்ளது.
போயிங் நிறுவனம்
அமெரிக்காவில் ஆர்லிங்டன் மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் போயிங் நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்ட அறிவிப்பில் 2022 இல் 15,000 பேரை பணியில் அமர்த்திய நிலையில் 2023 இல் 10,000 ஊழியர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தது. ஆனால் இந்தக் காலகட்டத்தில் சில ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
2000 ஊழியர்கள் பணிநீக்கம்
இந்த அறிவிப்பின் படி போயிங் நிறுவனம் முதல் கட்டமாக நிதி மற்றும் மனிதவள பிரிவில் இந்த ஆண்டுச் சுமார் 2000 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளையில் அந்த வேலைகளில் மூன்றில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்திற்கு அவுட்சோர்சிங் செய்வதாகவும் போயிங் உறுதிப்படுத்தியது.
போயிங் பங்குகள்
போயிங் நிறுவனத்தின் பங்குகள் திங்கட்கிழமை 0.4% அதிகரித்து 206.81 டாலராக இருந்தது, ஆனால் வர்த்தகம் முடிவதற்குப் பின் 0.5% உயர்ந்துள்ளது. இந்தப் பணிநீக்கம் சந்தை முதலீட்டாளர்களைப் பாதிக்காமல் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்திருப்பது சாதகமான ஒன்றாக உள்ளது.
ஏர் இந்தியா ஒப்பந்தம்
சமீபத்தில் டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏர் இந்தியா-வின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 190 737மேக்ஸ் விமானங்கள், 20 787விமானங்கள், 10 777எக்ஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
டிசிஎஸ்-க்கு அவுட்சோர்சிங்
ஏர் இந்தியா தனது விமான வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல பில்லியன் டாலர் மதிப்பிலான 495 போயிங் ஜெட் விமானங்களை வாங்கும் இதேவேளையில், போயிங் செலவுகளைக் குறைக்கும் விதமாகத் தற்போது பணிநீக்கம் செய்யும் 2000 வேலைவாய்ப்புகளில் 3ல் ஒரு பங்கை டிசிஎஸ்-க்கு கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications