கோல்ட் காயின், கோல்ட் பார் வாங்கி இருப்பீங்க.. ஆனா கோல்ட் டீ குடிச்சிருக்கீங்களா? 1 டீ ரூ.1 லட்சம்!

நீங்கள் ஒரு கப் டீ-க்கு எவ்வளவு செலவு செய்வீர்கள்? மிஞ்சி மிஞ்சி போனால் 10 ரூபாய். இன்னும் சில கடைகளில் 30 ரூபாய் கூட செலவாகலாம். அதையும் மீறி பேன்சி கஃபேக்களில் டீ குடித்தால் 300 ரூபாய் வரையும் செலவாகலாம். ஆனால் துபாயைச் சேர்ந்த கஃபே ஒன்று ஒரு கப் டீ-க்கு ரூ.1 லட்ச ரூபாய் விலை நிர்ணயத்துள்ளது. அப்படி அந்த டீயில் என்ன இருக்கிறது என்று யோசிக்கிறீர்களா? அந்த டீயில் தங்கத் துகள்களை தூவி 24 கேரட் தங்க ஷீட்டை போட்டு பரிமாறுகின்றனர்.

இந்தத் தங்க டீ எங்கே கிடைக்கிறது?: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுசேதா சர்மா என்ற நபரின் கற்பனையின் மூலம் உருவானது தான் "கோல்ட் கரக் டீ" என்று சொல்லப்படும் "தங்க டீ". இது துபாயில் உள்ள போஹோ கஃபேவில் கிடைக்கிறது. இந்த கபே டிஐஎஃப்சியின் எமிரேட்ஸ் பைனான்சியல் டவர்ஸில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. புதிதாக ஒரு கடை திறக்கப்பட்டு விட்டால் கடையில் விற்கப்படும் பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்காக கடைக்காரர்கள் புதுப்புது யுக்திகளை பயன்படுத்துவது வழக்கம்தான். அந்த வகையில் தற்போது இந்த தங்க டீ-யை கடையின் உரிமையாளர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

 கோல்ட் காயின், கோல்ட் பார் வாங்கி இருப்பீங்க.. ஆனா கோல்ட் டீ குடிச்சிருக்கீங்களா? 1 டீ ரூ.1 லட்சம்!

டூயல் மெனு: போஹோ கஃபேவில் 2 மெனு உள்ளது. ஒன்று இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மலிவு விலையிலான இந்திய தெருவோர உணவு வகைகளை வாங்கிக் கொள்ளலாம். இது ஒரு வகையான மெனு. மற்றொன்று இந்த ஹோட்டலில் பிரத்தியேகமாக பரிமாறப்படும் ஆடம்பர உணவு வகைகளை தேர்வு செய்யலாம். இது மற்றொரு மெனு.

"சிலர் ஆடம்பர உணவுகளை ருசிக்க விரும்புவார்கள். அப்படிப்பட்ட நபர்களும் இங்கு சாப்பிட முடியும். அதே நேரத்தில் பரந்த விரிந்த சமூகத்திற்கும் நாங்கள் உணவளிக்க விரும்புகிறோம். அதற்காகத்தான் எங்களிடம் 2 மெனு உள்ளது" என்று போஹோ கஃபேவின் உரிமையாளரான சுசேதா சர்மா கூறியுள்ளார்.

 கோல்ட் காயின், கோல்ட் பார் வாங்கி இருப்பீங்க.. ஆனா கோல்ட் டீ குடிச்சிருக்கீங்களா? 1 டீ ரூ.1 லட்சம்!

போஹோ கஃபேவில் வழங்கப்படும் கோல்ட் கரட் டீ-யின் விலை 5000 AED. அதாவது இந்திய மதிப்புக்கு ரூ.1.1 லட்சம். இந்த ஹோட்டலில் டீ மட்டுமின்றி, இதே விலையிலான தங்க காப்பியும் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு பானத்திலும் தங்கம் தூவப்படுகிறது. அதோடு வெள்ளி கப்பில் பரிமாறப்படுகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்கள் டீயை குடித்துவிட்டு வெள்ளி கப்பை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

டீயை வெள்ளி கப்பில் ஊற்றி.. மேலே தங்க துகள்களை தூவி.. அதோடு 22 கேரட் தங்க ஷீட்டை டீ-யின் மேலே போட்டு பரிமாறுகின்றனர். வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து இவ்வளவு தொகையை செலவு செய்யாமல் தங்க டீயை ருசிக்க வேண்டும் என்ற விரும்பினால், வெள்ளி கப் இல்லாமல் வெறும் தங்க டீ-யை வாங்கிக் கொள்ளலாம்.. இதற்கான விலை வெறும் 150 AED. அதாவது இந்திய மதிப்புக்கு ரூ.3,500. இங்கு வழங்கப்படும் சிறப்பு மெனுவில் மற்ற சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. தங்கம் கலந்த தண்ணீர், தங்க பர்கர், தங்க ஐஸ்கிரீம் போன்றவற்றையும் உண்டு மகிழலாம்.

இங்க பரிமாறப்படும் தங்க டீ மற்றும் தங்க காப்பியின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இதை நல்ல அனுபவம் என்று கூறியிருந்தனர். ஆனால் பலர் பணத்தை வீணடிப்பதற்கு இதுவும் ஒரு வழி என்று தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த தங்க டீயை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+