மும்பையில், இட நெருக்கடி காரணமாக, பாலிவுட் நட்சத்திரங்கள் இப்போது உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதில் அதிகளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.
நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பது மட்டுமல்லாமல் சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். நிறைய ஹிந்திப் படங்களை அவர் தயாரித்துள்ளார். ஆக்ஷன் நடிப்புக்குப் பெயர் போன ஜான் ஆபிரகாம் தேசிய பிலிம் விருது பெற்றவர். அத்துடன் நான்கு முறை தேசிய பிலிம் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.

மும்பையின் கார்ஸ் லிங்கிங் ரோட்டில் உள்ள ஒரு வீட்டை பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் ரூ.70.83 கோடிக்கு வாங்கியுள்ளார். இதற்கு பத்திரப் பதிவு கட்டணமாக ரூ.4.24 கோடியை அவர் செலுத்தியுள்ளார்.
ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ள அந்த பங்களா ஒரு சதுர அடி ரூ.40,000 முதல் ரூ.90,000 வரை இருக்கும் என்று உள்ளூர் தரகர்கள் தெரிவித்தனர். ஜான் ஆபிரகாம் பங்களா 5,416 சதுர அடி கொண்டுள்ளது. மொத்த நிலப்பரப்பு 7,722 சதுர அடியாகும்.
அவரது வீடு அமைந்துள்ள பகுதி மும்பையின் முக்கியமான ரீடெய்ல் ஹைஸ்ட்ரீட்ஸ் பகுதியாகும். நிறைய கல்வி நிறுவனங்கள் அங்கு அமைந்துள்ளன.
இந்த வீட்டை அவர் 2023 டிசம்பர் 27 ஆம் தேதியன்று வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் ஜான் ஆபிரகாம் இதுவரை அதற்கு பதில் அளிக்கவில்லை.
ஜான் ஆபிரகாம் போர்ப்ஸின் இந்தியப் பிரபலங்கள் பட்டியலில் அவரது வருமானம் மற்றும் பிரபலத்துக்காக 2017 ஆம் ஆண்டில் இடம் பெற்றார். மும்பையில் 1972 டிசம்பர் 17 ஆம் தேதி பிறந்த ஜான் ஆபிரகாம், அவரது தந்தை மலையாளி சிரியன் கிறிஸ்தவர், தாயார் இராணி ஜோராஸ்டிரியன்.
முதலில் ஜான் ஆபிரகாம் ஒரு மாடலாகத்தான் இருந்தார். பின்னர் கிஷோர் நமித் கபூரின் நடிப்பு வகுப்புகளில் பயிற்சி எடுத்தார். 2003 ஆம் ஆண்டில் முதல் படத்தில் நடித்தார். அதில் பிபாஸா பாஷுவுடன் ஜோடியாக நடித்திருந்தார். ஜிஸ்ம் என்ற அந்தப் படம் ஒரு பயங்கர திரில்லர் ஜானர் ஆகும்.
அந்தப் படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் பிலிம்பேரின் சிறந்த ஆண் நடிகர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டார்.
பெற்றொர் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பதால் ஜான் ஆபிரகாம் குறிப்பாக எந்த மதத்தையும் சாரவில்லை. அவரது ஜொராஷ்ட்ரியன் பெயர் ஃபர்ஹான். ஆனால் ஜான் என்ற பெயரால் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் செய்யப்பட்டார்.
தன்னை ஒரு மத நம்பிக்கையாளர் என்று மட்டும் கூறிக் கொள்வதுண்டு. பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பே ஜான் சைவ சாப்பாடு தான் சாப்பிடுவார். உடலை மிகவும் ஃபிட்டாக வைக்க நிறைய பயிற்சிகளை எடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications