சமீபத்திய காலமாக நடிகர் நடிகைகளின் முதலீடு என்பது தொழிற்துறையில் அதிகரித்து வருகின்றது. பலரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவும், சொந்த தொழிலில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ரன்வீர் சிங் முதல் முறையாக ஸ்டார்ட் அப் ஒன்றில் முதலீடினை செய்துள்ளார்.
ரன்வீரின் முதலீடு எவ்வளவு? எதற்காக எந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். மற்ற முக்கிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

சுகர் காஸ்மெடிக்ஸ்-ல் முதலீடு
பிரபலமான காஸ்மெடிக்ஸ் நிறுவனமான, சுகர் காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தில் தான் ரன்வீர் சிங் முதலீடு செய்துள்ளார். எனினும் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை.

சுகர் காஸ்மெடிக்ஸ-ன் தொடக்கம்
சுகர் காஸ்மெடிக்ஸ் கடந்த 2015ல் நேரடி நுகர்வோர் பிராண்டாக தொடங்கப்பட்டது. எனினும் 2017ல் ஆஃப்லைன் வர்த்தகத்திலும் விரிவாக்கம் செய்ய தொடங்கியது. தற்போது இது ஆண்டுக்கு 550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையை செய்துள்ளது. இது தற்போது 550 இடங்களில் 45,000 சில்லறை வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் உள்ளது.

ரன்வீர் சிங் மகிழ்ச்சி
சுகர் காஸ்மெடிக்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளில் 4 மடங்கிற்கும் மேலாக விற்பனையை அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் தனது முதலீடு குறித்து சிங், பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் இந்த பிராண்டில் முதலீடு செய்வதில் பெருமிதம் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

வளர்ச்சியினை மேம்படுத்தும்
இதே சுகர் காஸ்மெடிக்ஸ்-ன் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான வினீதா சிங், சுகர் தைரியமான, சுதந்திரமான பெண்கள் விரும்பும் மேக் அப் ஆகும். இந்த கூட்டணி மேலும் எங்களது ஆளுமையை மேம்படுத்தும்.
இது தவிர மேற்கொண்டு விரிவாக்கத்திற்காக நிறுவனம் தொடர்ந்து முதலீட்டினை ஈர்க்க திட்டமிட்டு வருகின்றது. இதற்காக பல சர்வதேச நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் விற்பனை
இது பெண்களுக்கு தேவையான பல வகையான மேக் அப் பொருட்களையும், மேக் அப் கிட்களையும் விற்பனை செய்து வருகின்றது. ஆன்லைனிலும் பல்வேறு சலுகைகளுடன் விற்பனை செய்து வரும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகவும் உள்ளது.