உலக அளவில் சாதனை படைத்த லியோ பட வில்லன் சஞ்சய் தத்.. அதுவும் எதில் தெரியுமா?

இந்தியாவில் பல விஷயங்கள் உலக அளவில் சாதனை படைக்கின்றன. ஆனால் தற்போது இப்படியொரு சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. அதுவும் பிரபல லியோ பட வில்லன் நடிகர் சஞ்சய் தத் முதலீடு செய்துள்ள விஸ்கி பிராண்ட் ஆனது நடப்பு நிதியாண்டில் முதல் 7 மாதங்களில் அதிகளவிலான மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பாட்டிலுக்கு ரூ.1,600 என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறதாம்.

திரைப்பட நட்சத்திரங்கள் இது போன்ற முயற்சிகளைத் தொடங்குவது இது முதல் முறை அல்ல. ஆனால் சந்தைகளின் துடிப்புடன் வணிகம் செய்பவர்கள் மிகக் குறைவு. ஆனால் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இதில் வித்தியாசமாக இருக்கிறார். நடிப்புத் திறமை மற்றும் ஸ்டைலுக்கு பெயர் போன நடிகர், வணிகத் துறையிலும் புதிய சரித்திரம் படைத்துள்ளார். அதுவும் உலக அளவில்.

உலக அளவில் சாதனை படைத்த லியோ பட வில்லன் சஞ்சய் தத்.. அதுவும் எதில் தெரியுமா?

நடிகர் ஏற்கனவே பல தொழில்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களில் முதலீடு செய்துள்ளார். ஆனால் தற்போது மது விற்பனை தான் இவருக்கு ஹிட் கொடுத்துள்ளது. ஜூன் 2023 இல், சஞ்சய் தத் விஸ்கி பிராண்டான தி க்ளென்வாக் (The Glenwalk)என்ற விஸ்கியை அறிமுகப்படுத்தினார். இவர் பிரீமியம் ஸ்காட்ச் விஸ்கி பிராண்டான தி க்ளென்வாக்கில் பங்குதாரர் ஆவார்.

இந்த க்ளென்வாக் விஸ்கி நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் 6,00,000 பாட்டில்களை விற்பனை செய்து வணிக உலகையும், மதுபானத் தொழிலையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மதுபான பிராண்ட் வெறும் 7 மாதங்களில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 10 மாநிலங்களில் செயல்படும் இந்த பிராண்ட், இந்தியாவின் ஸ்பிரிட்ஸ் சந்தையில் வலுவான முன்னிலையில் உள்ளது என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

மதுப்பிரியர்களான ஆல் டைம் ஃபேவரிட் க்ளென்வாக் ஸ்காட்ச் விலை ஆனது 700 மில்லி பாட்டிலின் விலை சுமார் 1,600 ரூபாய் ஆகும். இந்த விஸ்கி, பல்வேறு பாரம்பரிய ஓக் காஸ்கில் முதிர்ச்சியடைந்த ஃபைன் மால்ட் மற்றும் தானிய ஸ்காட்ச் விஸ்கியின் கலவையாகும்.

மோக்ஷ் சானி, ஜிதின் மெரானி, ரோஹன் நிஹலானி, மனிஷ் சானி மற்றும் நீரஜ் சிங் ஆகியோரால் நிறுவப்பட்ட பிரீமியம் விஸ்கி தயாரிப்பாளரான கார்டெல் பிரதர்ஸ் உடன் இணைந்து கிளன்வாக் பிராண்ட் நிறுவப்பட்டது. மோக்ஷ் சானி லிவிங் லிக்விட்ஸ் என்ற மதுபான சில்லறை விற்பனை சங்கிலியின் நிறுவனர் ஆவார்.

மகாராஷ்டிரா, ஹரியானா, கோவா, டாமன் மற்றும் டையூ, டெல்லி, பஞ்சாப், சண்டிகர், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் க்ளென்வாக் விற்பனையில் உள்ளது. பிராண்ட் ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ளது. நிர்வாகம் தற்போது உலகளாவிய சந்தைகளிலும் தனது இருப்பை அதிகரிப்பதில் மும்முரமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+