சென்னை: பாலிவுட் நடிகைகளில் தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கிறார் நடிகை கஜோல். இவர், பாலிவுட் ஸ்டார் நடிகர்களாக ஷாருக்கான், சல்மான், அமீர் கான், அஜய் தேவ்கன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 50 வயதை எட்டி இருக்கும் கஜோலின் சொத்து மதிப்பு மற்றும் சொகுசு கார்கள் என்னென்ன என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வெண்ணிலாவே வெண்ணிலாவே என்ற பாடலை கேட்டதுமே டக்குனு நினைவு வருவது கஜோலில் அழகிய கண்ணும், வசீகரமான டஸ்கி டோனும் தான். கஜோல் அறிமுகமான ஒரே படத்திலேயே தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்த கஜோல், பல வருடங்களுக்கு பிறகு வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது.

பாலிவுட் நடிகை : நடிகை கஜோல் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 22 வயதில் நைசா என்கிற மகளும், 14 வயதில் யுக் தேவ்கன் மகனும் உள்ளனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் பயணித்து வரும் நடிகை கஜோல், இன்றும் திரைப்படங்கள், ஓடிடி, டிவி மற்றும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிகையாக மட்டுமில்லாமல் ஒரு வலுவான நிதி போர்ட்ஃபோலியோவையும் அவர் உருவாக்கியுள்ளார்.
சொத்து மதிப்பு: அதன் தகவலின் படி, நடிகை கஜோலின் மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ₹249 கோடியாக உள்ளது. நடிகையாக இருந்த கஜோல் 2014ஆம் ஆண்டு, மராத்தி திரைப்படமான 'விட்டி தண்டு' படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறினார். நடிப்பு மட்டுமில்லாமல் பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் மூலமாகவும் இவர் வருமானத்தை ஈட்டி வருகிறார்.
சொகுசு கார்கள்: நடிகை கஜோல், மும்பை ஜூஹுவில் உள்ள 'ஷிவ் சக்தி' என்ற பங்களாவில் தனது கணவர் அஜய் தேவ்கனுடன் வசித்து வருகிறார். இந்த வீட்டின் மதிப்பு சுமார் ₹60 கோடி. அதுமட்டுமில்லாமல், ஜூஹுவில் இரண்டு அபார்ட்மெண்ட்கள் உள்ளன அதன் மதிப்பி ₹28.5 கோடியாகும். மேலும், கோரேகானில் வணிக வளாகம் உள்ளது அதன் மதிப்பு ரூ7.5 கோடியாகவும் லண்டன் பார்க் லேனில் உள்ள ₹54 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்து இருக்கிறார். விதவிதமான கார்கள் மீது ஈடுபாடு கொண்ட கஜோல், BMW X7, Volvo XC90, Audi Q7 போன்ற லக்சரி SUV கார்கள் அவரிடம் உள்ளன. இதைத் தவிர BMW i7 காரையும் அவர் வைத்திருக்கிறார். மேலும், முன்பு Rolls-Royce Cullinan காரையும் அவர் முன்பு பயன்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications