இந்தியாவில் தென்னிந்திய சினிமா துறையை காட்டிலும் பாலிவுட்டில் நடிகர், நடிகைகள் உள்ளிட்டவர்களுக்கு சம்பளம் அதிகம். பாலிவுட் சினிமாவின் சந்தை பெரியது என்பதே இதற்கு முக்கிய காரணம். பாலிவுட்டில் கோடியில் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பலர் புத்திசாலித்தனமாக ரியல் எஸ்டேட், பங்குகள் போன்றவற்றில் முதலீடு செய்கின்றனர்.
தற்போது பாலிவுட் பிரபலங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களில் சிலர் முதலீட்டாளர் என்பதை தாண்டி ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கி செயல்படுத்தியும் வருகின்றனர். Inc42-ன் தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 26 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சினிமா துறையை சேர்ந்த 19க்கும் மேற்பட்ட பிரபலங்கள் முதலீடு செய்துள்ளனர்.

அக்சய் குமார்: இவர் இந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் சில குறிப்பிடப்படா முதலீட்டாளர்களுடன் இணைந்து டூ பிரதர்ஸ் ஆர்கானிக் பார்ம் என்ற வேளாண் துறையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.
அலியா பட்: டயர்ப்பர்கள் மற்றும் உள்ளாடைகள் உள்ளிட்ட குழந்தை மற்றும் அம்மா பராமரிப்பு பிராண்டான சூப்பர்பாட்டம்ஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்தார். அலியா பட் ஒரு தொழில்முனைவோர் கூட, 2020ல் குழந்தை ஆடைகள் மற்றும் மகப்பேறு உடைகள் பிராண்டான Ed-a-Mamma அறிமுகம் செய்தார். இதனை கடந்த செப்டம்பரில் ரிலையன்ஸ் ரீடெய்ல் சுமார் ரூ.300 கோடிக்கு வாங்கியது.
தீபிகா படுகோனே: இவர் தீவிர தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளராக இருந்து வருகிறார். இவரது முதலீட்டு நிறுவனமான கா என்டர்பிரைசஸ் இந்த ஆண்டு ப்ளூ டோகாய் காபி ரோஸ்டர்ஸின் சீரிஸ் பி நிதிச் சுற்றில் கணிசமான தொகையை முதலீடு செய்தது. கடந்த ஆண்டு நடிகர் ஜிகர் ஷாவுடன் இணைந்து தோல் பராமரிப்புடன் கூடிய தனிப்பட்ட பராமரிப்பு பிராண்டான 82°E அறிமுகம் செய்தார்.
தியா மிர்சா: குழந்தை மற்றும் தாய் பராமரிப்பு தயாரிப்புகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில், நடிகை தியா மிர்சா கடந்த செப்டம்பரில் குட் கிளாம் குழுமத்தின் பேபி சக்ராவில் கணிசமான தொகையை முதலீடு செய்தார்.
ஏக்தா கபூர்: பி2பி சந்தையான யார்ன் பஜார் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ப்ரீ சீரிஸ் ஏ சுற்றில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் முதலீடு செய்தார். 2019ல் பிரதிக் காடியாவால் தொடங்கப்பட்ட இந்த ஸ்டார்ட்அப், அனைத்து நூல் தொடர்பான தேவைகளுக்கும் ஒரே ஒரு தீர்வாக செயல்படுகிறது. இந்நிறுவனம் கண்டுபிடிப்பு, வர்த்தகம், நிதி, தளவாடங்கள், ஆலோசனை மற்றும் சந்தை நுண்ணறிவு சேவைகளை வழங்குகிறது.
காஜல் அகர்வால்: இந்த ஆண்டு டி2சி பிராண்ட் தி ஆயுர்வேதா கம்பெனியில் நடிகை காஜல் அகர்வால் முதலீடு செய்துள்ளார்.
சுனில் ஷெட்டி: நடிகர், தொழில்முனைவோர் மற்றும் ஆக்டிவ் ஸ்டார்ட்அப் முதலீட்டாளரான சுனில் ஷெட்டி இந்த ஆண்டு வாயூ, கிளாஸ்ரூம், ப்ரோ பன்ஜா லீக் மற்றம் ரீகிரிப் உள்ளிட்ட பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்தார்.
சுக்பீர் சிங்: பாடகரான சுக்பீர் சிங் சைவ கடந்த ஆகஸ்டில் சைவ உணவு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான பிட்ஸ்ஸ்யரின் ப்ரீ சீரிஸ் ஏ நிதி சுற்றில் கணிசமான தொகையை முதலீடு செய்தார்.
ஷில்பா ஷெட்டி: இவர் இந்த ஆண்டு 2 ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். WickedGud மற்றும் KisanKonnect ஆகிய இரண்டு நிறுவனங்களில் ஷில்பா ஷெட்டி குந்த்ரா முதலீடு செய்தார். அண்மையில் Mamaearth ஐ.பி.ஓ.வின் போது 13.93 லட்சம் பங்குகளை நடிகை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் தத்: கடந்த பிப்ரவரில் டான்டவுன் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிதி திரட்டும் சுற்றில் முதலீடு செய்தார். கடந்த ஜூன் மாதம் அல்கோபெவ் நிறுவனமான கார்டெல் அண்ட் பிரதர்ஸ் நிறுவனத்தில் வெளியிடப்படாத தொகையை செலுத்தி உள்ளார்.
ப்ரினீதி சோப்ரா: இந்த ஆண்டு ஜூலையில் தனிப்பட்ட பராமரிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான கிளென்ஸ்டாவில் குறிப்பிடத்தொகையை முதலீடு செய்துள்ளார்.மேலும் அந்நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் உள்ளார்.
நயன்தாரா: கடந்த அக்டோபரில் இவர் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து சென்னை தளமாக கொண்ட தி டிவைன் புட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தார்.
மசாபா குப்தா: ஆடை வடிவமைப்பாளரும், நடிகையுமான மசாபா குப்தா, பர்பிள் ஸ்டைல் லேப்ஸ் நிறுவனத்தின் சீரிஸ் சி நிதி சுற்றில வெளிப்படுத்தப்படாத தொகையை செலுத்தினார். 2015ல் அபிஷேக் அகர்வாலால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் உயர்தர வடிவமைப்பாளர் பிராண்டுகளை விற்பனை செய்கிறது.
மலைக்கா அரோரா: இவர் கடந்த ஜனவரியில் ஹெல்தி டெசர்ட் ஸ்டார்ட்அப் நிறுவனமான கெட் ஏ வேயில் கணிசமான தொகையை முதலீடு செய்துள்ளார். இந்நிறுவனம் தனது பிராண்ட் தூதராக மலைக்கா அரோராவை நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்கி அலி: பிரபல பாடகரான லக்கி அலி அண்மையில் ஸ்டார்ட்அப் நிறுவனமான நாக்சென்ஸின் ப்ரீ சீரிஸ் ஏ சுற்றில் பணத்தை முதலீடு செய்தார்.
கரீனா கபூர்: கடந்த ஆகஸ்ட் மாதம் டி2சி பழங்கள் மற்றும் காய்கறிகள் பிராண்டான Pluckk-ல் முதலீடு செய்தார். மேலும் அந்நிறுவனத்தின் பிராண்ட் தூதராகவும் உள்ளார். மேலும் கரீனா கபூர் கடந்த அக்டோபரில் கொரிய தோல் பராமரிப்பு பிராண்டான Quench Botanics-ல் முதலீடு செய்தார்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications