இந்தியாவின் பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பல வங்கிகளில் போலியாக ஆவணங்களை காட்டில் சுமார் 10000 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிவிட்டு தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
இவரை இந்தியாவுக்குக் கொண்டு வர மத்திய அரசு பல வகையில் முயற்சி செய்து வரும் வேளையில், நீரவ் மோடிக்குச் சொந்தமான தொத்துக்களை அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் கைப்பற்றி விற்பனை செய்து வருகிறது. இப்படி ஒரு சொத்தை தான் பாலிவுட் நடிகை ஒருவர் வாங்கியுள்ளார்.

பாலிவுட்டில் சில ஆண்டுகள் மட்டுமே நடித்து பெரிய அளவில் பிரபலமடைந்த நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா ஆகியோருக்கு சொந்தமான பானே குரூப் (Bhaane Group), இந்தியாவின் நிதியில் தலைநகராக இகுக்கும் மும்பையின் பிரபல மியூசிக் ஸ்டோரான ரிதம் ஹவுஸ் இயக்கி வந்த கடையை 47.92 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
வெறும் 3,600 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள ரிதம் ஹவுஸ், தற்போது ஒரு சதுரடி 1.3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டு உள்ளது. ரிதம் ஹவுஸ்-ஐ ஒரு மியூசிக் ஸ்டோராக நடத்தி வந்தது பைர்ஸ்டார் டயமண்ட் இன்டர்நேஷனல் ப்ரைவேட் லிமிட்ட, இந்த நிறுவனத்திற்கு சொந்தக்காரர் நீரவ் மோடி ஆவார்.
2018 இல் மூடப்பட்ட இந்த மியூசிக் ஸ்டோர் வங்கி நிர்வாகம் கைப்பற்றி பைர்ஸ்டார் டயமண்ட் இன்டர்நேஷனல் நிறுவனதாக அறிவித்து ஏலம் விடப்பட்டது. இந்த முறையில் தான் ரிதம் ஹவுஸை தற்போது பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் அவரது கணவர் ஆனந்த் அஹுஜா இணைந்து தங்களுடைய பானே குரூப் (Bhaane Group) வாயிலாக வாங்கியுள்ளனர்.
இந்த முக்கியமான ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் குறித்து பானே குரூப்-ன் (Bhaane Group) செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார், ஆனால் ஒப்பந்தத்தின் மதிப்பு, பங்கு இருப்பு குறித்த தரவுகளை பகிர்ந்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.
ஆனந்த் அஹுஜா-வின் தந்தை ஹரிஷ் அஹுஜா நாட்டின் முன்னணி டெக்ஸ்டைல் தொழிலதிபர் ஆவார். இவருக்கு சொந்தமான ஷாஹி எக்ஸ்போர்ட்ஸ் ப்ரைவேட் நிறுவனம் யுனிகோலோ, டெகத்லான் மற்றும் எச்&எம் உள்ளிட்ட சர்வதேச பிராண்டுகளுக்கு பல முக்கியமான ஆடைகளை தயாரித்து விநியோகம் செய்யும் இந்தியாவின் மிகப்பெரிய ஆடை தயாரிப்பாளர்களில் ஒன்றாக உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications