பாலிவுட் திரையுலகின் 'மகாநாயகன்' என அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர், தனது அசாத்திய நடிப்புத் திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம்பிடித்துள்ளார். இவர், சினிமா மட்டுமின்றி, இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தையிலும் புத்திசாலித்தனமான முதலீடுகளை செய்து, தனது நிதி அறிவாற்றலையும் நிரூபித்துள்ளார்.
அந்த வகையில், மும்பையின் ஆடம்பரமான ரியல் எஸ்டேட் சந்தையில் முக்கியமான ஒரு விற்பனையை தற்போது வெற்றிகரமாக முடித்துள்ளார். அவர், கோரேகான் கிழக்கில் உள்ள புகழ்பெற்ற 'ஒபராய் எக்ஸ்க்விசிட்' (Oberoi Exquisite) வளாகத்தில் தனக்கு சொந்தமான இரண்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளை நல்ல லாபத்தில் விற்றுள்ளார்.

மகாராஷ்டிரா அரசின் பதிவு மற்றும் முத்திரைத் துறை ஆவணங்களின்படி, அமிதாப் பச்சன், ஒபராய் எக்ஸ்க்விசிட் அடுக்குமாடிக் குடியிருப்பின் 47-வது தளத்தில் உள்ள கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய இரண்டு குடியிருப்புகளை மொத்தமாக ரூ.12 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இதில் ஒவ்வொரு வீடும் தலா ரூ.6 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குடியிருப்புகளை அமிதாப் பச்சன், 2012 ஆம் ஆண்டில் ரூ.8.12 கோடிக்கு வாங்கியிருந்தார். தற்போது, 13 ஆண்டுகள் கழித்து இதை ரூ.12 கோடிக்கு விற்பனை செய்ததன் மூலம், தனது ஆரம்ப முதலீட்டில் சுமார் 47% அதிக லாபத்தை ஈட்டியுள்ளார்.
இந்த விற்பனையின் மூலம், அமிதாப் பச்சன் ரியல் எஸ்டேட் முதலீட்டில் எவ்வளவு புத்திசாலித்தனமாக செயல்படுகிறார் என்பதை அறிய முடிவதாக ரியல் எஸ்டேட் வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதற்கு முன்னதாக, இந்த ஆண்டு ஜனவரி 2025 இல், அவர் மும்பை ஓஷிவாராவில் இருந்த ஒரு 'டூப்ளக்ஸ்' குடியிருப்பை ரூ.83 கோடிக்கு விற்பனை செய்தார். அந்தக் குடியிருப்பை அவர் வெறும் ரூ.31 கோடிக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவருக்கு 168% லாபம் கிடைத்தது.
இந்த இரண்டு குடியிருப்புகளையும் ஆஷா ஈஸ்வர் சுக்லா மற்றும் மம்தா சூரஜ்தேவ் சுக்லா ஆகிய இரு பெண்கள் வாங்கியுள்ளனர். மகாராஷ்டிரா அரசு, பெண் வாங்குபவர்களுக்கு வழங்கும் 1% முத்திரைத் தாள் வரிச் சலுகையை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
கோரேகான் கிழக்கில் இள்ள இந்த 'ஒபராய் எக்ஸ்க்விசிட்' குடியிருப்பு வளாகம், அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இது, ஒபராய் மால், வெஸ்டின் ஹோட்டல், சர்வதேச வணிகப் பூங்கா மற்றும் ஒபராய் சர்வதேசப் பள்ளி போன்ற வசதிகள் அடங்கிய பெரிய மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி. இத்தகைய வசதிகள்தான் இப்பகுதியின் சொத்து மதிப்பை கணிசமாக உயர்த்தியுள்ளது.
அமிதாப் பச்சனின் குடும்பம், ஜுஹுவில் உள்ள 'ஜல்சா', 'பிரதீக்ஷா', 'ஜனக்' போன்ற பங்களாக்கள் உட்பட பல சொத்துக்களில் முதலீடு செய்துள்ளது. சமீபத்தில் கூட, அவர்கள் ஓஷிவாராவில் உள்ள ஒரு வணிகத் திட்டத்தில் சுமார் ரூ.29 கோடிக்கு நான்கு அலுவலக இடங்களை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications