மும்பை: இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானியின் மகளான ஈஷா அம்பானி பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனிடம் மிகப்பெரிய அளவில் வணிக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் துணை நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெய்லுக்கு தலைமையேற்று நடத்து வருகிறார்.

ரிலையன்ஸ் ரீடெய்லை விரிவுபடுத்தும் நோக்கில் ஈஷா அம்பானி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார். தற்போதைய நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் மதிப்பு என்பது 8,20,000 கோடி ரூபாயாக இருக்கிறது.
சர்வதேச அளவில் பல்வேறு பிராண்டுகளுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு முகேஷ் ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தை பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறார்.
ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் கீழ் ஈஷா அம்பானி கொண்டு வந்த அழகுசாதன பொருட்களுக்கான பிராண்ட் டிரா. இதன் விற்பனையை மேம்படுத்தும் நோக்கில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
நடிகை தீபிகா படுகோன் ஏற்கனவே சொந்தமாக 82°E என்ற பெயரில் ஒரு பிராண்டை ஏற்படுத்தி பல்வேறு அழகுசாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறார். தற்போது ஈஷாவுக்கும் தீபிகாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், டிரா தளத்தில் குறிப்பாக ஆஃப்லைன் கடைகளில் தீபிகா படுகோனின் பிராண்டை சேர்ந்த பொருட்கள் விற்பனையாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிரா வாடிக்கையாளர்கள் பல்வேறு உயர்தர அழகு சாதன பொருட்களை வாங்கும் வாய்ப்பை பெறுகின்றனர் என ஈஷா அம்பானி தெரிவித்துள்ளார். டிராவில் தோல் பராமரிப்பு, கேச பராமரிப்பு மற்றும் பல்வேறு அழகு சாதன பொருட்கள் கிடைக்கின்றன.
மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிரா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. அதேபோல தீபிகா படுகோனின் சொந்த நிறுவனமான 82°E என்பது ஆன்லைன் வழியாக பல்வேறு அழகு சாதன பொருட்களை விற்பனை செய்து வருகிறது இந்த நிறுவனமும் கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்டது.
நைகா, மிந்த்ரா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக ஈஷா அம்பானி உருவாக்கிய நிறுவனம் டிரா. இந்த நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக கரீனா கபூர், கைரா அத்வானி மற்றும் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் ஆகியோர் செயல்படுகின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications