இந்தியாவில் ஆடம்பர கார்களின் விற்பனை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஒவ்வொரு வருடமும் அதகரித்து வரும் வேளையில், பெரும் தொழிலதிபர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என பலரும் ஒரு காரை நோக்கி செல்கின்றனர். அந்த ஒரு கார் வாங்குவது என்பது பெரிய கௌரவமாக பார்க்கப்படும் வேளையில் டாப்ஸி-யும் இந்த முக்கிய காரின் வாடிக்கையாளர் பட்டியலில் இணைந்துள்ளார்.
இந்திய ஆட்டோமொபைல் பிரிவில் மிகவும் ஆடம்பரமான காராக பார்க்கப்படுவதும், இப்போது ஆடம்பர உலகின் டிரெண்டாக இருப்பதும் Mercedes-Maybach GLS600 என்ற கார் தான். இந்த காரை வாங்க தான் பிரபலங்களும், தொழிலதிபர்களும், கோடீஸ்வரர்களும் காத்துக்கிடக்கின்றனர்.

தற்போது பாலிவுட் நட்சத்திரங்களின் வீடுகளின் பார்கிங் கராஜ்-ல் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் Mercedes-Maybach GLS600 காருக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார் டாப்ஸி .
ஹிந்தியில் டன்கி, தப்பட், பட்லா மற்றும் தமிழில் காஞ்னா, வை ராஜா வை, கேம் ஓவர் என பல படங்களில் நடித்த டாப்ஸி பண்ணு, புதிய மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரை கடந்த வார இறுதியில் வாங்கி அசத்தியுள்ளார். டாப்ஸி பண்ணு வாங்கிய ஜிஎல்எஸ்600 காரின் ஸ்பெஷலான நிறம் பல்லாடியம் சில்வர், இந்த கார் அவருடைய வீட்டுக்கே டெலிவரி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2021ல் முதல் முறையாக இந்தியாவில் மெர்சிடீஸ் பென்ஸ் தனது முதல் எஸ்யூவி காரான Mercedes-Maybach-ஐ அறிமுகம் செய்தது. அறிமுகம் செய்த சில நாட்களிலேயே திட்டமிட்ட 50 கார்களும் விற்பனை செய்த ரெக்கார்டை இந்த கார் பெற்றுள்ளது.
இந்தியாவில் மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 காரின் ஆடம்பர விலை என்னவோ 2.35 கோடி ரூபாய், ஆனால் டாப்ஸி பண்ணு வாங்கிய காரின் விலை 3.5 கோடி ரூபாய். இந்த கார இந்தியாவில் செய்யப்படுவது இல்லை, மொத்தமாக தயாரிக்கப்பட்டு வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படும் கார்.

மெர்சிடிஸ்-மேபேக் ஜிஎல்எஸ்600 கார் தற்போது பாலிவுட் பிரபலங்களின் காராகவே மாறியுள்ளது. ஆயுஷ்மான் குரானா, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், கிருதி சனோன், அஜய் தேவ்கன், ஆதித்யா ராய் கபூர், அர்ஜுன் கபூர், ஷில்பா ஷெட்டி, மற்றும் ராம் சரண் என பலர் இந்த காரை வைத்துள்ளனர்.



Click it and Unblock the Notifications