சென்னை: இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்தது மூலம் இனியும் ப்ரைவேட் ஈக்விட்டி நிறுவனங்களை நம்பியிருக்கக் கூடாது என்பதற்காக பொது சந்தை நோக்கிய பிரபல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் படையெடுத்து வருகிறது. குறிப்பாக இந்திய மக்களுக்கு தற்போது ஆபத்பாந்தவனாக இருக்கும் குவிக்-காமர்ஸ் நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் வேளையில் நாட்டின் பெரும் பணக்காரர்களின் கண் இவர்கள் கண் முன் நிற்கிறது.
பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் குடும்ப அலுவலகம், ஸ்விக்கி நிறுவனத்தில் ஒரு சிறிய பங்கை வாங்கியுள்ளது தற்போது ஒட்டுமொத்த ஸ்டார்ட்அப் சந்தையை உலுக்கியுள்ளது. இது உணவு விநியோகம் மற்றும் குவிக்-காமர்ஸ் நிறுவனமான ஸ்விக்கியின் ஊழியர்கள் மற்றும் ஆரம்பக் கட்ட முதலீட்டாளர்கள் வைத்திருக்கும் பங்குகளை அமிதாப் பச்சனின் குடும்ப அலுவலகம் வாங்கியுள்ளது.

அமிதாப் பச்சன் நீண்ட காலமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார், அதிலும் குறிப்பாக டிஜிட்டல் டெக் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல துறை நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிகம். அமிதாப் பச்சன் பாலிவுட் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் சினிமா-வை காட்டிலும் ரியல் எஸ்டேட் மற்றும் பங்கு முதலீட்டு வாயிலாகவே அதிகளவில் சம்பாதிக்கிறார்.
அமிதாப் பச்சன் போலவே மோதிலால் ஒஸ்வால் நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவரான ராம்தேவ் அகர்வால் ஸ்விக்கி நிறுவனத்தில் சமீபத்தில் பங்கு வாங்கியுள்ளார். இந்தியாவில் குவிக் காம்ர்ஸ் துறை மீதான முதலீடுகள் உச்சக்கட்டத்தை எட்டிய நேரத்தில் இந்த முதலீடுகள் நடந்துள்ளது.
ராம்தேவ் அகர்வால் ஒரு மாதத்திற்கு முன்பு Zepto-வின் சுமார் 665 மில்லியன் டாலர் முதலீட்டு சுற்றில் பங்குகழை வாங்கியுள்ளார். இதன் மூலம் மோதிலால் ஒஸ்வால் நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவரான ராம்தேவ் அகர்வால் குவிக் காமர்ஸ் துறையின் மீதான அதீத நம்பிக்கையின் காரணமாக ஸ்விக்கி, செப்டோ என இரு நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.
ராம்தேவ் அகர்வால், அமிதாப் பச்சன் ஆகியோர் ஸ்விக்கி நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. ஸ்விக்கியின் இரண்டாம் நிலை பங்கு விற்பனை, இந்த நிறுவனத்திற்கு சுமார் $10-11 பில்லியன் மதிப்பீடு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மறுமுனையில் ஸ்விக்கி 1.25 பில்லியன் டாலர் IPO க்கு தயாராகியுள்ளது.
மும்பையை தளமாகக் கொண்ட Zepto, 5 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சமீபத்திய முதலீட்டு சுற்றில் 300-350 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டும் பணியில் உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications