பாலிவுட்டின் பாட்ஷா என அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக்கான். இவர் தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஷாருக்கான் திரைப்படங்களில் நடித்து சம்பாதிப்பது மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து சிறந்த தொழில் முனைவோராகவும் திகழ்ந்து வருகிறார் .
கடந்த மாதம் தான் ஹாரன் இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் அம்பானி , அதானி பெயர்களை எல்லாம் தாண்டி ஒரு நடிகரின் பெயர் இடம்பெற்று அனைவரையும் ஆச்சர்ய்யபட வைத்தது. அது தான் ஷாருக்கான், இந்திய பில்லினியர்கள் கிளப்பில் இணைந்த முதல் நடிகர் என்ற பெருமை ஷாருக்கானுக்கு உண்டு.

நடிகர் ஷாருக்கானின் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர்கள் அதாவது 12,500 கோடி ரூபாய். இவர் நடிகர் மட்டுமல்ல சிறந்த தொழில்முனைவோரும் கூட. அது தான் ஷாருக்கான் இந்திய பில்லினியர்கள் பட்டியலில் இடம் பிடிக்க வைத்துள்ளது. சர்வதேச பிரபலங்களை எல்லாம் விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக ஷாருக்கான் திகழ்கிறார் . அர்னால்டு, செலினா கோம்ஸ் போன்ற உலகப் பிரபலங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஷாருக்கான் இந்த இடத்தை அத்தனை எளிதாக எட்டி விடவில்லை .
ஷாருக்கான் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மிகச்சிறந்த முறையில் தன்னுடைய வருமானத்தை முதலீடு செய்வதிலும் வல்லவர். ஒரு படத்தில் நடித்தாலே இவர் சராசரியாக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். இதனை தாண்டி இவருக்கு அதிக வருமானம் தருவது இவரின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.

ஷாருக்கான் ரெட் சில்லீஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார், பல நிறுவனங்களில் முதலீட்டாளராக இருக்கிறார், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். இதனை தாண்டி விளம்பரங்களில் தோன்றுவதன் மூலமாகவும் இவர் வருமானம் பெறுகிறார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஷாருக்கானால் தொடங்கப்பட்ட ரெட் சில்லீஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், பல்வேறு வெற்றி திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. இது தவிர ஷாருக்கான நிறுவனம் நவீன கிராபிக்ஸ் , விஷுவல் எபெக்ட் ஆகிய பிரிவுகளிலும் கவனம் செலுத்துகிறது .
ஷாருக்கான் இன்டோர் தீம் பார்க் நிறுவனமான KidZania-இல் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார் . இவர் இந்தியா மட்டும் இல்லாமல் பல்வேறு நாடுகளிலும் ரியல் எஸ்டேட்டிலும் முதலீடு செய்து வைத்திருக்கிறார். மும்பையில் இவருக்கு சொந்தமான குடியிருக்கும் மன்னத் என அழைக்கப்படுகிறது இதன் மதிப்பே 200 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது . இது தவிர மும்பையின் அலிபாக்கில் பெரிய மாளிகையை ஷாருக்கான் கட்டி வைத்திருக்கிறார். விடுமுறை நாட்களில் மட்டும் சென்று தங்குவதற்காக இதனை பயன்படுத்துகிறார்.
ஷாருக்கான் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலம் சம்பந்தப்பட்ட செயலியான Nourish, லைவ் ஸ்டிரீமிங் பிளாட்பார்ம் ஆன MirrAR நிறுவனத்திலும் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறார். இது தவிர ஹூண்டாய் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களின் விளம்பர தூதுவராகவும் செயல்படுகிறார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications