இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ்-ன் ஹைதராபாத் அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, இந்த அலுவலகத்தில் இருந்த சுமார் 1500 ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
ஹைதராபாத் நகரின் முக்கிய பகுதியான கோண்டாபூர் பகுதியில் அமைந்துள்ள நாட்டின் உயர்மட்ட ஐடி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது, ஊழியர்களை அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த போன் கால் செய்தது யார் என்பதில் தான் பெரிய டிவிஸ்டே உள்ளது.

வியாழக்கிழமை காலை 11 மணியளவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் கோண்டாப்பூர் அலுவலகத்தின் பாதுகாப்புக் குழுவிற்கு வெடிகுண்டு மிரட்டல் குறித்த அழைப்பு வந்தது. போனில் அழைத்தவர் கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதை அடுத்த பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்து ஊழியர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்த உடனேயே டிசிஎஸ் அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கூறிய நிலையில் பாதுகாப்பு பணிகளை சில நிமிடத்தில் வேகப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் ஹைதராபாத் கோண்டாபூர் அலுவலகத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வளாகத்தில் இருந்தது தெரிய வந்தது.
டிசிஎஸ் அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கூறிய நிலையில் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்து ஒட்டுமொத்த அலுவலகத்தையும் சோதனை செய்த பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தினார்.

மேலும் வெடிகுண்டு மிரட்டல் விட்டுத்து போன் கால் செய்தவர் டிசிஎஸ் நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் ஊழியர் என அடையாளம் காணப்பட்டது. இதற்கு மத்தியில் மிரட்டல் விடுத்தவர் மீண்டும் அதே பாதுகாப்பு அலுவலகத்திற்கு போன்கால் செய்து இது பொய்யான தகவல் என்று கூறினார். ஆனாலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் முழு டிசிஎஸ் வளாகத்தையும் ஆய்வு செய்து வெடிகுண்டு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை உறுதி செய்தனர்.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விட்டுத்தவர் டிசிஎஸ் நிறுவனத்தின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் ஊழியர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் இவர் பெங்களூரில் இருந்து அழைத்தது கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அந்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications