இந்தியாவின் நிதியியல் தலைநகரமான மும்பையின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக விளங்கும் வோர்லி-யில் சுமார் 22 ஏக்கர் நிலத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் 5200 கோடி ரூபாய்க்கு கோய்சு ரியாலிட்டி வாங்கியுள்ளது.
மும்பையில் நடக்கும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் மதிப்பீட்டு அளவில் இது மிகப்பெரிய விற்பனையாக பார்க்கப்படுகிறது. சரி இந்த இடத்தின் முன்னாள் உரிமையாளர் யார் தெரியுமா..?

தமிழ்நாட்டில் தற்போது பெரும்பாலான மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பெரிய அளவில் சூடுப்பிடித்துள்ளது. 5 வருடத்திற்கு விற்றால் வாங்க ஆள் இல்லாமல் இருந்த இடங்கள் இன்று எதிர்பார்க்காத விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிட்டதட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை தான், இப்படியிருக்கையில் மும்பை ரியல் எஸ்டேட் மட்டும் மலிவான விலையிலா வர்த்தகம் செய்யப்படும்..?
மும்பை வோர்லி பகுதியில் பாம்பே டையிங் அண்ட் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை தான் கோய்சு ரியாலிட்டி (Goisu Realty) வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, இந்த நிலத்தை விற்க பாம்பே டையிங் நிர்வாகம் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
பாம்பே டையிங் அண்ட் உற்பத்தி நிறுவனத்தின் பங்குதாரர்களின் ஒப்புதலின் பேரில், பேஸ் 1-க்கு சுமார் ரூ. 4,675 கோடிகளை Goisu Realty அளிக்க உள்ளது, இதை தொடர்ந்து இரண்டாம் கட்டத்திற்கு பாம்பே டையிங் சில நிபந்தனைகளை நிறைவுசெய்து, அதற்கான உறுதியான ஒப்பந்தங்களைச் செயல்படுத்தி முடித்தவுடன் மீதமுள்ள சுமார் ரூ.525 கோடிகளை அளிக்க உள்ளது.
இதற்காக 22 ஏக்கர் நிலத்தில் வாடியா இண்டர்நேஷனல் சென்டர் (அதுதான் வாடியா குரூப் தலைமையகம்) இருக்கும் பொருட்களை காலி செய்ய வரிசையாக பல டெம்போக்கள் வந்தது. சேர்மன் அலுவலகத்தின் பொருட்கள் பாம்பே டையிங்-ன் Dadar-Naigaum பகுதி கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications