ஆக்சிஜன் பெயர் வைத்ததால் 156% வளர்ச்சி.. ஒரு NBFC நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்..!

ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா 2வது அலையில் தவித்து வருகிறது, நாட்டின் பல பகுதிகளில் ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் உயிருக்கு போராடும் நிலையில் ஆக்சிஜென் பெயர் கொண்ட ஒரு நிறுவனம் ஆக்சிஜன் தயாரிக்காத நிலையிலும் சுமார் 156 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகச் சந்தையிலும் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் மருத்துவமனை படுக்கைகள், மருந்துகள், நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் என அனைத்திற்கும் பற்றாக்குறை உள்ளது.

லாக்டவுன் அறிவிப்புகள், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணத்தால் 2020 மார்ச் மாதத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட அதே நிலை மீண்டும் உருவாகியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதன் எதிரொலியாகவே தற்போது பாம்பே ஆக்சிஜென் நிறுவனம் 156 சதவீதம் வளர்ச்சி பதிவு செய்துள்ளது.

 பாம்பே ஆக்சிஜென் நிறுவனம்

பாம்பே ஆக்சிஜென் நிறுவனம்

பாம்பே ஆக்சிஜென் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனம் 1960 முதல் இயங்கி வருகிறது, இந்நிறுவனத்தின் முக்கிய வர்த்தகம் என்னவென்றால் தொழிற்துறை நிறுவனங்களுக்குத் தேவையான வாயுவை உற்பத்தி செய்து விநியோகம் செய்வது தான். இதில் ஆக்சிஜன் வாயு-ம் ஒன்று.

 வாயு உற்பத்தி நிறுத்தம்

வாயு உற்பத்தி நிறுத்தம்

ஆனால் வாயு உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஆகஸ்ட் 1, 2019 முதல் பாம்பே ஆக்சிஜென் கார்பரேஷன் நிறுவனம் நிறுத்திவிட்டு தனது பெரும் பகுதி முதலீடுகளைப் பங்குகளிலும், மியூச்சவல் பண்டுகளிலும், பிற நிதியியல் முதலீடுகளிலும் செய்துள்ளது. இதுதான் இந்நிறுவனத்தின் முக்கிய வருமானமாகவும் திகழ்கிறது.

 NBFC நிறுவனம்

NBFC நிறுவனம்

ஆக்சிஜென்

 பங்கு விலை உயர்வு

பங்கு விலை உயர்வு

மார்ச் 31ஆம் தேதி பாம்பே அக்சிஜன் நிறுவனத்தின் பங்கு விலை 11,025 ரூபாய் விலை விற்பனை செய்யப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சுமார் 25,500 ரூபாய் அளவில் உயர்ந்தது. கிட்டதட்ட 12 வர்த்தக நாட்களில் இந்நிறுவனப் பங்குகள் 131.3 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

 கொரோனா 2வது தொற்று அலை

கொரோனா 2வது தொற்று அலை

மேலும் கொரோனா 2வது தொற்று அலை வேகம் எடுக்கப் பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 20 வரையிலான காலகட்டத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1.84 சதவீதம் சரிந்தது. இதேகாலகட்டத்தில் பாம்பே ஆக்சிஜென் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனப் பங்குகள் 9,964.95 ரூபாயில் இருந்து 25,500 ரூபாய் வரையில் உயர்ந்து சுமார் 156 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+