புதியதாக பணிக்கு சேரும் ஊழியர்கள் கால நேரம் பாராமல் தினசரி 18 மணி நேரம் பணி புரிய வேண்டும் என பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகரியான ஷாந்தனு தேஷ் பாண்டே கடந்த ஆண்டு கூறியிருந்தார். இது ஊழியர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் சமீபத்தில் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் தலைவரை பாராடியுள்ளார்.
ஊழியர் ஷாங்கி செளஹான் ஒரு வைர சொத்து. அவர் எப்போதும் வேலையில் இருந்து பின் வாங்கியதில்லை. மூத்த அதிகாரிகள் அவரின் உடல் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள்.
செளஹான் போல் யாருமில்லை
கடினமான உழைப்பாளிகளை நான் பார்த்துள்ளேன். மணி நேரங்களை வைத்து சாத்தியமானவற்றை மற்றும் சாத்தியமற்றவற்றையும் செய்யும் நபர்கள். ஆனால் ஷாங்கி செளஹானைபோல் யாரும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று தேஷ் பாண்டே தனது லிங்க்ட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் ஒருவர் ஆட்டோரிக்ஷாவில் தூங்கும் ஊழியரின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு தனது கருத்தினையும் பதிவிட்டுள்ளார்.
கவலைபடுகின்றோம்?
பேப்பரின் படி அவர் எங்கள் விற்பனை தலைவர், ஊழியர்களின் தலைவர், மக்கள் குழுத் தலைவர். ஆனால் நிஜத்தில் அவர் எங்கள் நிறுவனத்தின் இதயத் துடிப்பு. அவர் எங்கள் வைர சொத்து. ஆக அவரின் உடல் நிலை குறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகின்றோம்.
வெற்றியில் முக்கிய பங்கு
நிறுவனர்களுக்கு செளஹான் போன்ற ஊழியர்கள் முக்கியமானவர்கள் என்று ஷாந்தனு தேஷ் பாண்டே குறிப்பிட்டுள்ளார். அதனை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உங்கள் நிறுவனத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஆக ஆவர்களைப் போல ஒன்றிருவர் இருந்தாலும் கூட போதும். அவர்களை நிறுவனம் எப்போதும் வைத்திருக்க வேண்டும்.
பலரும் கருத்து
பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் இந்த பாராட்டு குறித்த பதிவானது, பலரின் மத்தியிலும் பலவிதமான கருத்துகளை பெற்றுள்ளது. சிலர் செளஹானின் அர்பணிப்பை பாராட்டி வருகின்றனர். சிலர் இது குறித்து எதிராகவும் கருத்துகளை கூறி வருகின்றனர்.
சரியான அணுகுமுறை அல்ல
சாந்தனு தேஷ் பாண்டே உங்கள் பதிவை படித்ததில் மகிழ்ச்சி. ஷாங்கி செளஹானைப் போல கொண்டிருப்பது நிறுவனத்திற்கு நல்லதாக தெரியலாம். ஆனால் அவரின் குடும்பம் மற்றும் அவரின் உடல் நிலை என்னவாகும்... எல்லா நேரமும், ஓய்வு இன்றி இயங்குவது என்பது சரியானதாக இருக்காது. என்னை பொறுத்த வரையில் இது சரியான அணுகுமுறை அல்ல என டாக்டர் பங்கஜ் குப்தா கருத்து தெரிவித்துள்ளார்.
பலரும் கருத்துகள்
மற்றொரு லிங்க்ட் பயனர் பணியாளர்களுக்கு சிறிது காலம் ஓய்வு எடுக்க அவகாசம் கொடுங்கள், அவருக்கு ஓய்வு தேவை என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் நான் செய்யும் வேலையை விரும்பி செய்கிறேன். நான் உற்சாகமாகவும் சோர்வாகவும் இருக்கிறேன். ஆக இது ஒரு தவறான விஷயமல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications